Published : 11 Nov 2025 06:50 AM
Last Updated : 11 Nov 2025 06:50 AM

தென்காசி மாவட்டம் இலஞ்சி மையத்தில் 2-ம் நிலை காவலர் தேர்வில் முறைகேடு: தேர்வர், ஒரு பெண் உட்பட 4 பேர் கைது

தென்காசி: இலஞ்​சி​யில் நடை​பெற்ற இரண்​டாம் நிலை காவலர் தேர்​வில் செல்​போனை பயன்​படுத்தி முறை​கேட்​டில் ஈடு​பட்ட தேர்​வர், அவருக்கு உதவிய பெண் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்டனர். தமிழ்​நாடு சீருடைப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் நேற்று முன்​தினம் இரண்​டாம் நிலை காவலர், சிறைக்​காவலர் மற்​றும் தீயணைப்​பாளர் பணி​களுக்​கான எழுத்​துத் தேர்வு நடை​பெற்​றது.

தென்​காசி அருகே இலஞ்சி தேர்வு மையத்​தில் தேர்​வர் ஒரு​வர் செல்​போனை பயன்​படுத்​தி​யதை, தேர்வு அறை கண்​காணிப்​பாளர் கண்​டறிந்​தார். உடனடி​யாக அவரை பிடித்​து, காவல் துறை​யினரிடம் ஒப்​படைத்​தார். குற்​றாலம் போலீ​ஸார் அவரை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தி​ய​தில் அவர், சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் (23) என்​பது தெரிய​வந்தது.

அவரது செல்​போனை ஆய்வு செய்​த​தில், வினாத்​தாளின் பக்​கங்​களை செல்​போன் மூலம் போட்டோ எடுத்​து, அவற்றை வாட்ஸ் அப் மூலம் சிவகிரியை சேர்ந்த தனது நண்​பர்​கள் பாண்​டிய​ராஜ் (23), மல்​லிகா (22) ஆகியோ​ருக்கு அனுப்​பி, அவர்​களிட​மிருந்து பதில்​களை பெற்று விடையளிக்க முயற்சி செய்​தது தெரிய​வந்​தது. ஆனால், பதில்​களை அனுப்​பும் முன்பே இந்த முறை​கேட்டை தேர்வு அறை கண்​காணிப்​பாளர் கண்​டறிந்​து, கோபிகிருஷ்ணனை பிடித்​துள்​ளார்.

3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்து விசா​ரணையை தீவிரப்​படுத்​தி​ய​தில், கோபி கிருஷ்ணனின் நண்​பரும் போட்​டித் தேர்​வுக்கு பயிற்சி பெற்​றவரு​மான பிரதீப் (31) என்​பவருக்​கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, நாமக்​கல் மாவட்​டத்​தில் பிரதீப் கைது செய்​யப்​பட்​டார்.

தேர்​வர்​கள் அனை​வரும் சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்டு தேர்வு மையத்​துக்​குள் செல்ல அனு​ம​திக்​கப்​பட்ட நிலை​யில், கோபிகிருஷ்ணன் எப்​படி தேர்வு மையத்​துக்​குள் செல்​போனை கொண்டு சென்​றார் என்​பது குறித்து பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட போலீ​ஸாரிடம், காவல்​துறை அதி​காரி​கள் விசா​ரணைநடத்தி வரு​கின்​றனர். விசா​ரணை முடி​வில், பணி​யில் மெத்​தன​மாக இருந்த காவல்​துறை​யினர் மீது துறைரீ​தி​யான நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் என்று தென்​காசி எஸ்​.பி. தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x