Published : 10 Nov 2025 06:57 AM
Last Updated : 10 Nov 2025 06:57 AM

சென்னை | போதைப் பொருளாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை: தலைமறைவாக இருந்த ரவுடி கைது

சென்னை: உடல்​வலி நிவாரண மாத்​திரைகளை போதைப் பொருளாக விற்​பனை செய்து வந்த ரவுடி கைது செய்​யப்​பட்​டார். சென்னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்​வாளர்​கள் தலை​மை​யிலும் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த தனிப்​படை​யினர் தீவிர ரோந்து மற்​றும் கண்​காணிப்​பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்​சி​யாக, கொடுங்​கையூர் போலீ​ஸார் கடந்த மாதம் 29-ம் தேதி கொடுங்​கையூர், சுகந்​தம்​மாள் நகர், கார் பார்க்​கிங் அருகே கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, அங்கு நின்​றிருந்த இளைஞரிடம் விசா​ரித்​தனர். அவர் முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​த​தால் அவரது உடமை​களை சோதித்​த​போது உடல்​வலி நிவாரண மாத்​திரைகள், சிரஞ்​சிகள் விற்​பனைக்​காக மறைத்து வைத்​திருந்​தது தெரிந்தது.

வலி நிவாரண மாத்​திரைகளை போதை மாத்​திரைகளாக விற்​பனை செய்ய திட்​ட​மிட்​டிருந்​ததும் தெரிந்​தது. இதையடுத்​து,
அவற்றை பறி​முதல் செய்த போலீ​ஸார். கொடுங்​கையூரைச் சேர்ந்த மகேஷ் (36) என்​பவரை கைது செய்​தனர்.

சிறையில் அடைப்பு: அவரது கூட்​டாளி​யான கொடுங்​கையூரைச் சேர்ந்த ரவுடி மணி​கண்​டன் என்ற மணி (34) தலைமறை​வாக இருந்​தார். தனிப்​படை போலீ​ஸார் தீவிர தேடு​தல் வேட்டை நடத்​தி, மணியை கைது செய்​துள்​ளனர். சரித்​திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்​கெனவே 18 குற்ற வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து அவர்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x