Published : 10 Nov 2025 06:38 AM
Last Updated : 10 Nov 2025 06:38 AM

சென்னை | உணவு டெலிவரி ஊழியர், லாரி ஓட்டுநரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாக கைதானவர்கள்.

சென்னை: தனி​யார் உணவு டெலிவரி ஊழியர் மற்​றும் லாரி ஓட்​டுநரிடம் கத்​தியை காட்டி வழிப்​பறி​யில் ஈடு​பட்ட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். திரு​வொற்​றியூர் மாட்டு மந்தை பகு​தி​யைச் சேர்ந்​தவர் முரு​கன் (30).

தனி​யார் உணவு டெலிவரி நிறு​வனத்​தில் வேலை செய்து வரு​கிறார். இவர் கடந்த 7-ம் தேதி அதி​காலை உணவு டெலிவரி செய்​து​விட்​டு, கன்​னி​காபுரம், பவானி அம்​மன் கோயில் அரு​கே இருசக்கர வாக​னத்​தில் செல்​லும்​போது அங்கு மற்​றொரு இருசக்கர வாக​னத்​தில் வந்த இளைஞர் ஒரு​வர், முரு​கனை கத்​தி​முனை​யில் வழிமறித்து மிரட்​டி, அவரிட​மிருந்த பணம் மற்​றும் செல்​போனை பறித்து தப்​பி​னார்.

இதுகுறித்து புளியந்​தோப்பு காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். விசா​ரணை​யில் வழிப்​பறி​யில் ஈடு​பட்​டது புளியந்​தோப்பு கன்​னி​காபுரத்​தைச் சேர்ந்த பிர​காஷ் (18) என்​பது தெரிந்​த​தால், அவரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதே​போல், புதுக்​கோட்டை மாவட்​டத்​தைச் சேர்ந்த பாண்​டியன் (50) என்​பவர் வியாசர்​பாடி​யில் தங்கி லாரி ஓட்​டுந​ராக பணி செய்து வரு​கிறார். இவரிட​மும் கடந்த 8-ம் தேதி கத்​தி​முனை​யில் வழிப்​பறி நடை​பெற்​றது. இச்​செயலில் ஈடு​பட்ட வியாசர்​பாடி, முல்லை நகரைச் சேர்ந்த பார்த்​த​சா​ரதி என்ற சாரதி (30) மற்​றும் அவரது கூட்​டாளி பூவரசன் (26) ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x