Published : 10 Nov 2025 07:25 AM
Last Updated : 10 Nov 2025 07:25 AM

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட தென்காசி தொழிலாளர்களை மீட்டுத்தர வலியுறுத்தல்

தளபதி சுரேஷ், இசக்கிராஜா

தென்காசி: மேற்கு ஆப்​பிரிக்க நாடான மாலி​யில் கடத்​தப்​பட்ட தென்​காசி தொழிலா​ளர்​களை மீட்​டுத்தர வேண்​டும் என்று அவர்​களது உறவினர்​கள் வலியுறுத்​தி​யுள்​ளனர். ராணுவ ஆட்சி நடை​பெறும் மாலி​யில், அல்​-​கொய்​தா, ஐஎஸ்​ஐஎஸ் போன்ற பயங்​கர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய பல்​வேறு கிளர்ச்​சிக் குழுக்​களும் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இந்​நிலை​யில், அங்​குள்ள கோப்ரி நகரில் தனி​யார் மின்​சார நிறு​வனத்​தில் வேலை​பார்த்த இந்​திய தொழிலா​ளர்​கள் 5 பேரை ஆயுதம் ஏந்​திய குழு​வினர் கடத்​திச் சென்​றனர்.

அவர்​களை மீட்​ப​தற்​கான முயற்​சி​யில் அங்​குள்ள இந்​திய தூதரகம் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது. மேலும், பாது​காப்பு கருதி கோப்​ரி​யில் இருந்த இந்​தி​யர்​கள் அனை​வரும் தலைநகர் பமாகோவுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டுள்​ளனர்.

கடத்​தப்​பட்ட 5 பேரில் இரு​வர் தென்​காசி மாவட்​டம் கடையநல்​லூர் முத்​து கிருஷ்ணாபுரம் பகு​தி​யைச் சேர்ந்த இசக்​கி​ராஜா (36), புதுக்​குடி ஊராட்சி கண்​மணி​யாபுரம் கிராமத்​தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் (26) என்று கூறப்​படு​கிறது. இவர்​களை உடனடி​யாக மீட்​டுத் தர பிரதமர் மோடி, தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அவர்​களது குடும்​பத்​தினர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்​.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x