Published : 08 Nov 2025 06:18 AM
Last Updated : 08 Nov 2025 06:18 AM

தீவிரவாதி அபுபக்கர் சித்திக் புழல் சிறையில் மீண்டும் அடைப்பு

சென்னை: பல்​வேறு தீவிர​வாத செயல்​களுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வர் அபுபக்​கர் சித்​திக். தலைமறைவாக இருந்த அவரை 30 ஆண்​டு​களுக்​குப் பிறகு, ஆந்​திர மாநிலம் அன்​னமய்யா மாவட்​டம், ராய்​சூட்​டி​யில் கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழக தீவிர​வாத தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர்.

உடன், அவரது கூட்​டாளி​யான முகமது அலி​யும் கைது செய்​யப்​பட்​டார். இரு​வரும் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இதற்கிடையே அவர் தங்கியிருந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து விசாரிக்க ஆந்​திர என்ஐஏ அதி​காரி​கள் அபுபக்கர் சித்திக்கை ஒரு​வார காலம் காவலில் எடுத்து புழல் சிறையி​லிருந்து ஆந்​திரா அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். இந்​நிலை​யில், விசா​ரணை முடிந்து அபுபக்​கர் சித்​திக் மீண்​டும் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x