Published : 08 Nov 2025 06:13 AM
Last Updated : 08 Nov 2025 06:13 AM

சேலம் | 2 மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

அய்யனார்

சேலம்: சங்​ககிரி அருகே 2 மூதாட்​டிகளை கொலை செய்த தொழிலா​ளியை போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டுப்​பிடித்​தனர். சேலம் மாவட்​டம் சங்​ககிரி அரு​கே​யுள்ள இடங்​கண​சாலை தூதனூர் பகு​தி​யில் கடந்த 4-ம் தேதி கல்​கு​வாரி குட்டை நீரில் 2 மூதாட்​டிகள் இறந்து கிடந்​தனர்.

வி​சா​ரணை​யில், அவர்​கள் அதே பகு​தி​யைச் சேர்ந்த பா​வாயி (70) மற்​றும் பெரி​யம்​மாள் (75) என்பது தெரிய​வந்​தது. அதே பகு​தி​யைச் சேர்ந்த தொழிலாளி அய்​ய​னார் (55) பணம் கொடுக்​கல், வாங்​கல் பிரச்​சினை காரண​மாக மூதாட்​டிகளை கொன்​று, அவர்​கள் அணிந்​திருந்த நகைகளை பறித்​துக் கொண்​டு, இரு​வரது சடலத்​தை​யும் கல்​கு​வாரி குட்​டை​யில் வீசி​யது தெரிய​வந்​தது.

தலைமறை​வாக இருந்த அய்​ய​னார், ஒருக்​காமலை பகு​தி​யில் பதுங்​கி​யிருப்​ப​தாக தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, மகுடஞ்​சாவடி காவல் ஆய்​வாளர் செந்​தில்​கு​மார் தலை​மை​யில், உதவி ஆய்​வாளர் கண்​ணன் மற்​றும் தலை​மைக் காவலர்​கள் அழகு முத்​து, கார்த்​தி​கேயன் ஆகியோர் நேற்று அய்​ய​னாரை சுற்றி வளைத்​தனர்.

அப்​போது, அய்​ய​னார் கத்​தி​யால் உதவி ஆய்​வாளர் கண்​ணனை குத்​தி​விட்டு தப்ப முயன்​ற​போது போலீ​ஸார் அவரை துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில், அய்​ய​னாரின் வலது காலில் குண்டு பாய்ந்​தது. பின்​னர் அய்​ய​னாரை கைது செய்த போலீ​ஸார், சேலம் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அய்​ய​னார் வெட்​டிய​தில் காயமடைந்த உதவி ஆய்​வாளர் கண்​ணன் சங்​ககிரி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். இது தொடர்​​பாக சேலம்​ எஸ்​.பி. (பொ) விமலா மற்​றும்​ அதி​காரி​கள்​ வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x