Published : 07 Nov 2025 07:21 AM
Last Updated : 07 Nov 2025 07:21 AM

ராயப்பேட்டையில் பைக் ரேஸில் ஈடுபட்ட மாணவர் விபத்தில் மரணம்: எதிர் திசையில் வந்த வியாபாரியும் உயிரிழந்த சோகம்

குமரன், சுகைல்

சென்னை: நண்​பருடன் பைக் ரேஸில் ஈடு​பட்ட கல்​லூரி மாணவரும், எதிர் திசை​யில் வந்த வியா​பாரி​யும் உயி​ரிழந்​தனர். சென்னை ராயப்​பேட்​டை, பேகம் சாகிப் சாலையை சேர்ந்​தவர் கல்​லூரி மாணவர் சுகைல் (19).

இவரும், அதே பகு​தி​யைச் சேர்ந்த நண்​ப​ரான செல்​போன் கடை ஊழியர் முகமது ஜோயல் (19) என்​பவரும் நேற்று முன்​தினம் இரவு ராயப்​பேட்டை பீட்​டர்ஸ் சாலை மேம்​பாலத்​தில் பைக் ரேஸில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

அவர்​கள் ராயப்​பேட்​டையி​லிருந்து அண்ணா சாலை நோக்​கி, பீட்​டர்ஸ் சாலை மேம்​பாலத்​தில் விலை உயர்ந்த பைக்​கு​களில் அதிவேகத்​தில் சென்​றுள்​ளனர். அப்​போது, அவர்​களது வாக​னம் ஒன்​றுடன் ஒன்று மோதி நிலை தடு​மாறி கீழே விழுந்​துள்​ளது. விழுந்த வேகத்​தில் பல மீட்​டர் தூரத்​துக்கு இழுத்து செல்​லப்​பட்​டுள்ளனர். பைக்​கு​களும் நொறுங்கி சிதறின.

அப்​போது, மேம்​பாலத்​தின் எதிர் திசை​யில், தி.நகரைச் சேர்ந்த வியா​பாரி​யான குமரன் (49) என்​பவர் பைக்​கில் வந்து கொண்​டிருந்​தார். விபத்​தில் சிக்​கிய இரு பைக்​கு​களில் ஒன்று சிதறிய வேகத்​தில் குமரனின் இருசக்கர வாக​னம் மீது பயங்​கர​மாக மோதி​யது.

இதில், அவரும் தூக்கி வீசப்​பட்​டார். 3 பேரும் பலத்த காயத்​துடன் அதே இடத்​தில் உயிருக்​குப் போராடினர். சிறிது நேரத்​தில் மாணவர் சுகைல், வியா​பாரி குமரன் இரு​வரும் அங்கேயே உயி​ரிழந்​தனர்.

முகமது ஜோயல் தலை மற்​றும் கைகளில் பலத்த காயத்​துடன் உயிருக்கு போராடிக் கொண்​டிருந்​தார். இதைக் கண்டு அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

நண்பர் படுகாயம்: தகவல் அறிந்து வந்த திரு​வல்​லிக்​கேணி போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார், இரு​வரின் உடல்​களை​யும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். காயமடைந்த முகமது ஜோயலும் அதே மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

விசா​ரணை​யில், உயி​ரிழந்த குமரன் தி.நகர் ராம​சாமி தெரு​வில் சொந்​த​மாக கவரிங் நகைக் கடை நடத்தி வந்​ததும், பணி முடித்து வீடு திரும்​பும் வழி​யில் இந்த சோக சம்​பவம் நிகழ்ந்​துள்​ளதும் தெரிய​வந்​தது.

போலீஸார் விசாரணை: விபத்து நடந்த பீட்​டர்ஸ் சாலை மேம்​பாலம் இரவில் இரும்பு தடுப்​பு​களைக் கொண்டு மூடப்​பட்டு போக்​கு​வரத்​துக்கு தடை செய்​யப்​பட்​டிருந்த நிலை​யிலும் இளைஞர்​கள் எப்​படி அங்கு ரேஸில் ஈடு​பட்​டனர் என்று போலீஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். பைக் ரேஸில் ஈடு​பட்​ட​வர் உயிரிழந்​ததோடு, அப்​பாவி வியா​பாரி ஒரு​வரும் உயி​ரிழந்​தது சோகத்தை ஏற்படுத்தியுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x