Published : 07 Nov 2025 06:35 AM
Last Updated : 07 Nov 2025 06:35 AM

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வீட்டு வாசலில் விளை​யாடிய சிறுமிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த முதி​ய​வருக்கு 20 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்னை கோயம்​பேடு பகு​தி​யைச் சேர்ந்த இளம்​பெண் ஒரு​வர், கணவனுடன் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால், தனது 6 வயது மகளு​டன் தாய் வீட்​டில் வசித்து வரு​கிறார். வேலைக்​குச் செல்​லும்​போது, மகளை தாயின் பராமரிப்​பில் விட்​டுச் ​செல்​வது வழக்​கம்.

கடந்த 2024 மார்ச் மாதத்​தில், வீட்டு வாசலில் சிறுமி விளையாடிக் கொண்​டிருந்​த​போது, பக்​கத்து வீட்​டில் வசிக்​கும் 62 வயது முதி​ய​வர் ஒரு​வர் அந்த சிறுமி​யின் கையைப் பிடித்து இழுத்​துச் சென்​று, ஆடைகளைக் களைந்து பாலியல் துன்​புறுத்​தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி தெரிய​வந்த சிறுமி​யின் தாய், முதி​ய​வரை தட்​டிக்​கேட்​டுள்​ளார். இதை வெளியே கூறி​னால் குடும்​பத்​தோடு கொலை செய்து விடு​வ​தாக முதி​ய​வர் மிரட்​டி​யுள்​ளார்.

இதை தொடர்ந்​து, சிறுமி​யின் தாய் அளித்த புகாரின்​பேரில், முதி​ய​வரை கோயம்​பேடு மகளிர் போலீ​ஸார் கடந்த ஆண்டு கைது செய்​தனர். சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.பத்மா முன்பு இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. அரசுத் தரப்​பில் சிறப்பு குற்​ற​வியல் வழக்​கறிஞர் எஸ்​.அனிதா ஆஜராகி வாதிட்​டார்.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி, குற்​றம்​சாட்​டப்​பட்ட முதி​ய​வருக்கு 20 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை, ரூ.1,000 அபராதம் விதித்து உத்​தர​விட்​டுள்​ளார். பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்​சத்தை இழப்​பீ​டாக வழங்​க​வும்​ உத்​தர​விட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x