Published : 07 Nov 2025 07:57 AM
Last Updated : 07 Nov 2025 07:57 AM

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: அண்ணா அறி​வால​யம், நடிகை குஷ்பு வீடு என சென்​னை​யில் 7 இடங்​களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்​டல் விடுக்கப்பட்​டது. தமிழக காவல் துறை​யின் தலைமை அலு​வல​க​மான டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

அதில், “கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை, அண்ணா அறி​வால​யம், சாந்​தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்​தை வெளி​யில் உள்ள நடிகர் எஸ்​.​வி.சேகர் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கம் உள்​ளிட்ட 7 இடங்​களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

தொடர் நிகழ்வு: இதைத் தொடர்ந்து போலீ​ஸார் வெடிகுண்டு மிரட்​டல் விடுவிக்​கப்​பட்ட 7 இடங்​களி​லும் வெடிகுண்​டு​களை கண்டறிந்து அகற்​றும் நிபுணர்​கள், மோப்ப நாய்​களு​டன் விரைந்து சோதனை நடத்​தினர்.

பல மணி நேரம் நடை​பெற்ற சோதனைக்கு பிறகும் சந்​தேகப்​படும்​படி​யான எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே அந்த மின்​னஞ்​சல், வதந்​தியை பரப்​பும் நோக்​கத்​தில் விடுக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

இது தொடர்​பாக சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். அண்​மைக் கால​மாக இது​போன்ற வெடிகுண்டு மிரட்​டல்​கள் தொடர்ந்து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x