Published : 06 Nov 2025 06:20 AM
Last Updated : 06 Nov 2025 06:20 AM

ஆள் மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் நகைப்பட்டறை பெண் உரிமையாளரின் ரூ.3 கோடி சொத்தை அபகரித்தவர் கைது

சந்​திரன்

சென்னை: ஆள் மாறாட்​டம் மற்​றும் போலி ஆவணங்​கள் மூலம் நகைப்​பட்​டறை பெண் உரிமை​யாளரின் ரூ.3 கோடி மதிப்​புள்ள சொத்தை அபகரித்​தவர் கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை கொளத்​தூர், பூம்​பு​கார் நகரில் வசிப்​பவர் பிரி​யங்கா (30). சொந்​த​மாக நகைப்​பட்​டறை நடத்தி வரும் இவருக்கு மாதவரம் பொன்​னி​யம்​மன்​மேடு, தணி​காசலம் நகரில் ரூ.3 கோடி மதிப்​பிலான காலிமனை இருந்​தது. இதை சிலர் போலி ஆவணம், ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​துள்​ளனர். மேலும் அந்த இடத்​தில் 2 அடுக்​கு​மாடி வீடு கட்டி விற்​பனை செய்ய தயா​ராக இருந்​துள்​ளனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் பிரி​யங்கா புகார் தெரி​வித்​தார். இதையடுத்து சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதில், பிரி​யங்கா​வுக்கு சொந்​த​மான சொத்தை போலி ஆவணம் மற்​றும் ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​தது கொளத்​தூர், பூம்​பு​கார் நகர், 8-வது குறுக்​குத் தெரு​வைச் சேர்ந்த சந்​திரன் (58) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர் அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x