Published : 06 Nov 2025 06:04 AM
Last Updated : 06 Nov 2025 06:04 AM

சீ​மான் வீட்​டுக்கு மீண்​டும் வெடிகுண்டு மிரட்​டல்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டுக்கு மீண்​டும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்​னை​யில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது. அதில், ‘நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன்’ என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதனையடுத்​து, நீலாங்​கரை போலீ​ஸார், வெடிகுண்​டு​களைக் கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள், மோப்ப நாய் உதவியுடன் நீலாங்​கரை​யில் உள்ள சீமான் வீட்​டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்​தினர். பல மணி நேர சோதனைக்​குப் பிறகும் சந்​தேகப்​படும்​படி​யான எந்​தப் பொருட்களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை.

எனவே, புரளியைக் கிளப்​பும் வகை​யில் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. சீமான் வீட்​டுக்கு கடந்த மாத​மும் இதே​போல், வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது குறிப்​பிடத்​தக்​கது. நேற்று முன்​தினம் நடிகை த்ரிஷா, இயக்​குநர் மணிரத்​தினம் வீடு உள்பட 8 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது. இந்த வெடிகுண்டு மிரட்​டல் ஆசாமியை சைபர் க்ரைம் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x