Published : 06 Nov 2025 06:46 AM
Last Updated : 06 Nov 2025 06:46 AM

மாணவி பாலியல் வழக்கு: கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்

கோவை: கோவை பீளமேடு பிருந்​தாவன் நகர்பகு​தி​யில், மாணவி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்ளனர். இந்த சம்​பவத்​தில் பாதிக்​கப்பட்ட மாணவி குணமடைந்​ததும் குற்​ற​வாளி​கள் அடை​யாள அணிவகுப்பு நடத்த போலீ​ஸார் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக பீளமேடு காவல் ஆய்​வாளர் அர்​ஜுன் குமார் தலை​மையி​லான போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த சம்​பவம் தொடர்​பான விசா​ரணை​யில், கூடு​தல் விசா​ரணை அதி​காரி​யாக துடியலூர் ஆய்​வாளர் லதா நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

மாணவி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் 3 பேரையும் அவர்​களின் காலில் சுட்​டு போலீ​ஸார் பிடித்​துள்​ளனர். காயமடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்களை போலீ​ஸார் கைது செய்ய வந்​த​போது என்ன நடந்​தது, எத்​தகைய சூழலில் துப்பாக்கிச் சூடு நடந்​தது என்​பது குறித்து கோவை வடக்கு ஆர்​டிஓ விசாரணை நடத்தி வரு​கிறார். இதையொட்​டி, மருத்​து​வ​மனை​யில் மூவரிட​மும் அவர் நேற்று வி​சா​ரணை மேற்​கொண்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x