Published : 05 Nov 2025 06:35 AM
Last Updated : 05 Nov 2025 06:35 AM

நிதி நிறுவனம் நடத்தியதால் நஷ்டம்: காங். மாநில பொதுச்செயலாளர் மனைவியுடன் தற்கொலை முயற்சி

சென்னை: நிதி நிறு​வனம் நடத்​தி​ய​தில் நஷ்டம் ஏற்​பட்​ட​தால், காங்​கிரஸ் மாநில பொதுச் செய​லா​ளர், மனை​வி​யுடன் விஷம் குடித்து தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். இதுகுறித்​து, போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். வளசர​வாக்​கம் அருகே காரம்​பாக்​கம், பொன்​னி​நகர், விவே​கானந்​தர் தெரு​வில் வசிப்​பர் தளபதி பாஸ்​கர் (52).

இவர், போரூரில் சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறு​வனம் நடத்தி வரு​கிறார். இந் நிறு​வனம் நடத்​தி​ய​தில் பாஸ்​கருக்கு கடுமை​யான நஷ்டம் ஏற்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் அவர் மிக​வும் விரக்​தி​யுட​னும், வேதனை​யுட​னும் காணப்​பட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் நள்​ளிரவு பாஸ்​கர், அவரது மனைவி தேன்​மொழி (45) ஆகிய இரு​வரும் தற்​கொலை செய்​யும் எண்​ணத்​துடன் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் இரு​வரும் கிடப்​பதை பார்த்த, அவரது குடும்​பத்​தினர் அதிர்ச்​சி​யடைந்​தனர். உடனே அவர்​கள், இரு​வரை​யும் மீட்டு வடபழனி​யில் உள்ள ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர்.

அங்கு இரு​வருக்​கும் தீவிர சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது. இதுகுறித்து வளசர​வாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை செய்​கின்​றனர். இதில் பாஸ்​கர், காங்​கிரஸ் கட்​சி​யின்​ ​மாநில பொதுச்​ செயல​ராக இருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x