Published : 04 Nov 2025 07:00 AM
Last Updated : 04 Nov 2025 07:00 AM

அண்ணா மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: மற்றொரு விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்

சென்னை: சென்​னை​யில் இரு​வேறு இடங்​களில் நிகழ்ந்த விபத்தில் மூதாட்​டி, இளைஞர் உயி​ரிழந்​தனர். தேனாம்​பேட்​டையைச் சேர்ந்​தவர் கணேஷ் குமார் (47). இவர் இருசக்கர வாக​னத்​தில் ஆயிரம்​ விளக்​கி​லிருந்து தேனாம்​பேட்டை நோக்கி அண்ணா சாலை வழி​யாக நேற்று முன்​தினம் சென்று கொண்​டிருந்​தார். அண்ணா மேம்​பாலத்​திலிருந்து இறங்​கும்​போது, திடீரென அவரது வாகனம் கட்​டுப்​பாட்டை இழந்​து, அங்​கிருந்த பாலத்​தின் தடுப்​புச் சுவரில் மோதி​யது.

இந்த விபத்​தில் இருசக்கர வாக​னத்​திலிருந்து நிலை தடு​மாறி கீழே விழுந்த கணேஷ் குமார் பலத்த காயமடைந்​தார். அந்த வழி​யாகச் சென்ற வாகன ஓட்​டிகள் கணேஷ் குமாரை மீட்டுஅரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்ல முயன்​றனர். ஆனால் அவர் அங்​கேயே இறந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து உடனடி​யாக காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. பாண்​டிபஜார் போக்கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் நிகழ்​விடம் விரைந்​து, கணேஷ் குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதே​போல், நேற்று முன்​தினம் மாலை கோடம்​பாக்​கம் நெடுஞ்​சாலை வழி​யாக நடந்து சென்று கொண்​டிருந்த மூதாட்​டிகள் இரு​வர் மீது அந்த வழி​யாக அதிவேக​மாக வந்த சொகுசு கார் மோதி​யது. இதில், செல்​லம்​மாள் (78) என்ற மூதாட்டி உயி​ரிழந்த நிலை​யில், நாகரத்​தினம் (72) என்ற மற்​றொரு மூதாட்டி ஆபத்​தான நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

ஈசிஆரில் விபத்து: ஈஞ்​சம்​பாக்​கம் கிழக்கு கடற்​கரை சாலை​யில் நேற்று மாலை இருசக்கர வாக​னத்​தில் சென்ற இரு​வர் மீது, அதிவேக​மாக வந்த சொகுசு கார் ஒன்று மோதி​யது. இதில், இருசக்கர வாக​னத்​தில் சென்ற கிருஷ்ண​மூர்த்தி என்​பவர் நிகழ்விடத்திலேயே உயி​ரிழந்​தார்.

மற்​றொரு​வர் படு​கா​யத்​துடன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்​துள்ள நீலாங்​கரை போலீ​ஸார், சொகுசு காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசா​ரித்து வரு​கின்​றனர். விபத்தை ஏற்​படுத்தியகாரின் கண்​ணாடியை பொது​மக்​கள் அடித்து உடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x