Published : 03 Nov 2025 07:19 AM
Last Updated : 03 Nov 2025 07:19 AM

ராமேசுவரத்திலிருந்து மன்னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழிலதிபர் உட்பட 4 பேர் கடற்படையினரால் கைது

ஐங்கரன்

ராமேசுவரம்: ​ராமேசுவரத்​திலிருந்து மன்​னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழில​திபர் உட்பட 4 பேரை அந்​நாட்டு கடற்​படையினர் கைது செய்​தனர். இலங்கை மன்​னார் பகு​தி​யைச் சேர்ந்த தொழில​திபர் ஐங்​கரன் (34). இவர் மீது மன்​னார் மாவட்​டத்​தில் பல்​வேறு வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இதனால், வழக்​கு​களில் இருந்து தப்​புவதற்​காக தனது குடும்​பத்​துடன் தமிழகம் வந்​து, ராம​நாத​புரத்​தில் வீடு எடுத்து சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்​தார்.

இலங்​கை​யில் ஐங்​கரன் மீது இருந்த வழக்​கு​களின் விசா​ரணை முடிவடைந்​து, அவர் வழக்​கு​களில் இருந்து விடுபட இருந்​த​தால், மீண்​டும் இலங்​கைக்​குச் செல்ல முடி​வெடுத்​தார். இதையடுத்​து, ராமேசுவரத்​திலிருந்து படகு மூலம் நேற்று அதி​காலை மன்​னார் புறப்​பட்​டுச் சென்​றார்.

அப்​போது, தலைமன்​னார் பகு​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த இலங்கை கடற்​படை​யினர், படகில் இருந்த ஐங்​கரன் உட்பட 4 பேரை பிடித்து மன்​னார் கடற்​படை முகா​முக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தினர்.

அதில் ஐங்​கரன் சட்​ட​விரோத​மாக ராம​நாத​புரத்​தில் 3 மாதங்​கள் வரை குடும்​பத்​தினருடன் தங்​கி​யிருந்​து, பின்​னர் ராமேசுவரத்​திலிருந்து படகு மூலம் இலங்கை வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, 4 பேரை​யும் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். அதே​போல, ராம​நாத​புரம் மாவட்ட போலீ​ஸாரும் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x