Published : 01 Nov 2025 07:36 AM
Last Updated : 01 Nov 2025 07:36 AM

டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.4.15 கோடி பறிப்பு: உத்தரப் பிரதேச இளைஞர் கைது

மணீஷ்கு​மார்

சென்னை: மயி​லாப்​பூரைச் சேர்ந்​தவர் ஸ்ரீவத்​ஸன் (73). சென்னை அண்ணா சாலை​யில் உள்ள பிரபல​மான தனி​யார் நிறு​வனம் ஒன்றில் அதி​காரி​யாக பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

இவருக்கு கடந்த மாதம் 26-ம் தேதி வாட்​ஸ்​-அப் மூலம் அழைப்பு வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர் தன்னை மும்பை போலீஸ் அதி​காரி என அறி​முகம் செய்து கொண்​டு, உங்​களது பெயரில் பெறப்பட்ட சிம் கார்டு சட்ட விரோத நடவடிக்​கைகளுக்கு பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்று கூறி​னார்.

மேலும் நீங்​கள் குற்​றமற்​றவர் என நிரூபிக்க வேண்​டு​ மா​னால் உங்​களது வங்​கி​யில் உள்ள பணம் முழு​வதை​யும் நான் சொல்​லும் வங்​கிக் கணக்​குக்கு அனுப்பி வையுங்​கள். உங்​கள் மீது குற்​றம் இல்​லை​ என தெரிய​வந்​தால், உடனே பணம் முழு​வதும் உங்​கள் வங்​கிக் கணக்​குக்கே மீண்​டும் அனுப்பி வைக்​கப்​படும்.

இல்​லை​யென்​றால் உங்​களை கைது செய்வோம் என மிரட்​டி​னார். பயந்​து​போன ஸ்ரீவத்​ஸன் அவர் தெரி​வித்​த​படி பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களுக்கு ரூ.4.15 கோடி அனுப்பி வைத்​தார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடிய​வில்​லை. தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த ஸ்ரீவத்​ஸன் இதுகுறித்து காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் தெரி​வித்​தார். இதுகுறித்து சென்னை மத்​திய குற்​றப்​பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப்பதிந்து விசா​ரித்​தனர்.

போலீஸ் அதி​காரி எனக் கூறி பணம் பறித்​தது உத்​தரப்​பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்​டம், மவு​ரானிப்​பூரைச் சேர்ந்த மணீஷ்கு​மார் (23) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அங்கு சென்ற தனிப்​படை போலீ​ஸார் மணீஷ்கு​மாரை கைது செய்து சென்​னை அழைத்​து வந்​து சிறை​யில்​ அடைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x