Published : 01 Nov 2025 07:14 AM
Last Updated : 01 Nov 2025 07:14 AM

தி.மலை | 2 குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை: சேத்​துப்​பட்டு அருகே 2 குழந்​தைகளை கொலை செய்​து​விட்​டு, தந்​தை​யும் தற்​கொலை செய்​து ​கொண்​டார் திரு​வண்​ணா​மலை மாவட்​டம் சேத்​துப்​பட்டு அடுத்த தெள்​ளூரைச் சேர்ந்​தவர் கிருஷ்ணன் (40). இவர் சென்​னை​யில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூங்​கொடி (38), மகள் கயல்விழி (9), மகன் நிதர்ஷன் (7).

கருத்து வேறு​பாடு காரண​மாக 3 ஆண்​டு​களுக்கு முன்பு கணவன்​-மனைவி பிரிந்து விட்​டனர். கிருஷ்ணன், மகள் கயல்​விழி​யுடன் சென்னை குரோம்​பேட்​டை​யிலும், பூங்​கொடி மகன் நிதர்​ஷனுடன் ஆகாரம் கிராமத்​தில் உள்ள தாய் வீட்​டிலும் வசித்து வந்​தனர்.

கயல்விழி, நிதர்ஷன்

இந்​நிலை​யில், பூங்​கொடிக்கு வேறு ஒரு​வருடன் கூடாநட்பு ஏற்​பட்​ட​தால், மகன் நிதர்​ஷனை தாய் வீட்​டிலேயே விட்​டு​விட்​டு, சென்னைக்கு சென்று நண்​பருடன் வாழ்ந்து வந்​துள்​ளார். தீபாவளியை முன்​னிட்டு கிருஷ்ணன் மகளு​டன் தெள்​ளூருக்​குச் சென்றுள்​ளார். அப்​போது, மகன் நிதர்​ஷனை தனியே விட்​டு​விட்​டு, மனைவி வேறு ஒரு​வருடன் சென்​று​விட்​டது அவருக்​குத் தெரிந்துள்ளது.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த கிருஷ்ணன் நேற்று முன்​தினம் இரவு இரு குழந்​தைகளை​யும் கழுத்தை நெரித்​துக் கொன்​று​விட்​டு, தானும் தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்​து​கொண்​டார். தகவலறிந்து வந்த சேத்​துப்​பட்டு போலீ​ஸார் 3 பேரின் உடல்களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக ஆரணி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், இச்​சம்​பவம் தொடர்​பாக போலீஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x