Published : 31 Oct 2025 06:16 AM
Last Updated : 31 Oct 2025 06:16 AM

சென்னை | சிட்பண்ட் நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடி மோசடி: நிறுவன இயக்குநர் உட்பட இருவர் கைது

ஆனந்தன், வினோத்குமார்

சென்னை: சிட்​பண்ட் நிறு​வனம் நடத்தி ரூ.2.4 கோடி மோசடி செய்த வழக்​கில் அந்​நிறுவன இயக்​குநர் உட்பட இரு​வரை சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சென்னை கோவிலம்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் டில்​லி​பாபு (39).

இவர், 2019-ம் ஆண்டு முதல் அரும்​பாக்​கம் பகு​தி​யில் செயல்​பட்டு வந்த சிட்​பண்ட் நிறு​வனம் ஒன்​றில் ரூ.2.17 லட்​சம் வரை செலுத்​தி​யுள்​ளார். சீட்டு பணம் முதிர்​வடைந்த பின்​னரும் டில்​லி​பாபு உட்பட சுமார் 70 பேருக்கு ரூ.2.4 கோடிக்கு மேல் பணம் திரும்ப கொடுக்​கப்​பட​வில்​லை. மேலும் அந்த நிறு​வனம் மூடப்​பட்டு அதன் உரிமை​யாளர் மற்​றும் நிர்​வாகி​கள் தலைமறை​வாகினர்.

இதனால் டில்​லி​பாபு உள்​ளிட்ட பணம் கட்டி ஏமாந்​தவர்​கள், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த செப்​.8-ம் தேதி புகார் அளித்​தனர். இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு உத்​தர​விடப்​பட்​டது. அதன்​படி, அப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் சம்​பந்​தப்​பட்ட சிட்​பண்ட் நிறு​வனம் சீட்​டுப் பணம் திருப்​பிக் கொடுக்​காமல் மோசடி​யில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது.

இதையடுத்து தலைமறை​வாக இருந்த நிறு​வனத்​தின் இயக்​குநர்​களில் ஒரு​வ​ரான கோயம்​புத்​தூர் மாவட்​டம், ஆர்​.எஸ்​. புரத்​தைச் சேர்ந்த ஆனந்​தன் (48), என்​பவரை கடந்த 28-ம் தேதி கோவை​யிலும், நிறு​வனத்​தின் கணக்கு மேலா​ளர் சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த வினோத்​கு​மார் (32) என்​பவரை நேற்று முன்​தினம் சென்​னை​யிலும் போலீ​ஸார் கைது செய்​தனர். வி​சா​ரணைக்​குப் பின்​னர் இரு​வரும் சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x