Published : 30 Oct 2025 06:05 AM
Last Updated : 30 Oct 2025 06:05 AM

தீர்த்து கட்டிவிடுவேன் என ரீல்ஸ் போட்டவரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேர் கைது

சென்னை: புது​வண்​ணாரப் பேட்​டை​யில் நடை​பெற இருந்த கொலையை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தி, ஆயுதங்​களு​டன் பதுங்கியிருந்த 4 பேரை கைது செய்​தனர். திரு​வொற்​றியூர், டி.எச்​.ரோடு அஜாக்ஸ் பேருந்து நிலை​யம் அருகே நேற்று முன்​தினம் இரவு கத்​தி​யுடன் 4 பேர் பதுங்​கி​யிருப்​ப​தாக புது​வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது. விரைந்து சென்ற போலீ​ஸார் 4 பேரை​யும் பிடித்து காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​றனர். அவர்​களிட​மிருந்து பட்​டாக்​கத்தி உள்​ளிட்ட ஆயுதங்​களை போலீஸார் பறி​முதல் செய்தனர்.

நண்பர்களுடன் கொலை திட்டம்: விசா​ரணை​யில், அதே பகு​தி​யைச் சேர்ந்த தீபக் என்​பவரை கொலை செய்ய 4 பேரும் திட்​ட​மிட்​டு, பதுங்கி தயார் நிலை​யில் இருந்​தது தெரிய​வந்​தது. பிடிபட்ட புது​வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த லோகேஷ்வரன் (20), அதே பகு​தி​யைச் சேர்ந்த ஜெய​ராஜ் (20), பார்த்​திபன் (22) மற்​றும் 17 வயதுடைய இளஞ்​சிறார் ஆகிய 4 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், “கடந்த ஒரு மாதத்​துக்கு முன்பு மாயாண்டி என்ற மனோஜ்கு​மார் கொலை செய்​யப்​பட்​டார். இந்த வழக்​கில் சிறை​யில் இருக்​கும் தேவா என்​பவரின் உறவினர்​தான் தீபக். இவர் கொலை செய்​யப்​பட்ட மாயாண்​டி​யின் ஆதர​வாள​ரான லோகேஷ்வரன் என்​பவரின் பெயரைக் குறிப்​பிட்​டு, ‘நீ​யும் என்​னிடம் சீக்​கிரம் சிக்கப் போகிறாய்’ என ரீல்ஸ் வெளி​யிட்​டுள்​ளார். இதனால் லோகேஷ்வரன் அவரது நண்​பர்​களு​டன் சேர்ந்து தீபக்கை கொலை செய்​யத் திட்​ட​மிட்​டது தெரிய​வந்​தது.

லோகேஷ்வரன் மீது 9 வழக்​கு​களும், ஜெய​ராஜ் மீது 3 வழக்​கு​களும், பார்த்​திபன் மீது 2 வழக்​கு​கள் உள்​ளது தெரிய​வந்​தது. கைது செய்​யப்​பட்​ட​வர்​களில் 3 பேர் சிறை​யில் அடைக்​கப்​பட்ட நிலை​யில், சிறு​வன் சிறார் நீதிக் குழு​மத்​தில் ஆஜர் செய்​யப்​பட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x