Published : 28 Oct 2025 10:34 AM
Last Updated : 28 Oct 2025 10:34 AM

டெல்லியில் நிர்வாண வீடியோக்களை தராததால் ஆத்திரம்: காதலரை எரித்துக் கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி: டெல்​லி, திமார்​பூர் காந்தி விஹார் பகு​தி​யிலுள்ள அடுக்கு மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் ராம் கேஷ் மீனா (32). இவர் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணைய (யுபிஎஸ்​சி) தேர்​வுக்​காக படித்து வந்​தார். இவரும் தடய அறி​வியல் கல்​லூரி மாண​வி​யான அம்​ரிதா சவு​கானும் (21) லிவிங் டுகெதர் முறை​யில் வசித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், கடந்த 6-ம் தேதி ராம் கேஷ் மீனா​வின் அடுக்குமாடிக் குடி​யிருப்​பில் தீவிபத்து ஏற்​பட்​ட​தாகத் தெரிய​வந்​தது. போலீ​ஸார் அங்கு சென்று பார்த்​த​போது வீட்​டில் எரிந்த நிலை​யில் ஆண் சடலம் கண்​டெடுக்​கப்​பட்​டது. போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் அது ராம் கேஷ் மீனா​வின் சடலம் என்​பது தெரிய​வந்​தது.

இந்​நிலை​யில், அவர் தீவிபத்து ஏற்​பட்டு இறந்​தாரா அல்​லது கொலை செய்​யப்​பட்​டாரா என்​பது குறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை​யில் இறங்​கினர். அப்​போது​தான் ராம் கேஷ் மீனா​வுடன், அம்​ரிதா சவு​கான் தங்​கி​யிருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து கண்​காணிப்பு கேம​ரா​வில் சிக்​கிய பதிவு​களை வைத்து போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​ய​போது தீவிபத்​துக்கு முன்​ன​தாக 2 பேர், ராம் கேஷ் மீனா​வின் வீட்​டுக்கு வந்​ததும், தீவிபத்து ஏற்​பட்ட சிறிது நேரத்​தில் 3 பேர் வெளி​யேறியதும் தெரியவந்தது. அதில் ஒரு​வர் அம்​ரிதா என்​பதை போலீ​ஸார் கண்​டறிந்​தனர். இந்​நிலை​யில் போலீ​ஸார் அவரை கடந்த 18-ம் தேதி கைது செய்​தனர்.

அப்​போது அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில் அவரது முன்​னாள் காதலர் சுமித் காஷ்யப், நண்​பர் சந்​தீப் குமார் ஆகியோ​ருடன் இணைந்து ராம் கேஷை கொலை செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து 21-ம் தேதி சுமித்​தும், 23-ம் தேதி சந்​தீப்​கு​மாரும் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்து போலீஸ் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: ராம் கேஷ், அம்​ரிதா ஆகியோர் லிவிங் டுகெதர் முறை​யில் கடந்த மே மாதம் முதல் இங்கு வசித்து வந்​துள்​ளனர். இந்​நிலை​யில் அம்​ரி​தா​வின் நிர்​வாண வீடியோக்​கள், புகைப்​படங்​களை எடுத்து அதை தனது கம்ப்​யூட்​டர் ஹார்ட் டிஸ்க்​கில் ராம் கேஷ் சேகரித்து வைத்​திருந்​தார்.

இதை அறிந்த அம்​ரிதா அதை தன்​னிடம் கொடுத்​து​விடு​மாறு கேட்​டுள்​ளார். மேலும், அந்த வீடியோக்​களை அழிக்​கு​மாறு ராம் கேஷிடம், அம்​ரிதா கூறிய​போது அதை அவர் ஏற்​க​வில்​லை.

இதையடுத்து சந்​தீப், சுமித் ஆகியோ​ருடன் இணைந்து ராம் கேஷை கொலை செய்​யத் திட்​ட​மிட்​டார் அம்​ரி​தா. இதைத் தொடர்ந்து 5-ம் தேதி சுமித், சந்​தீப் இரு​வரும் வீட்​டுக்கு வந்து ராம் கேஷை அடித்​துக் கொலை செய்​தனர். பின்​னர் சடலத்தை வீட்​டில் போட்​டு​விட்​டு, கேஸ் சிலிண்​டரை திறந்து விட்​டுள்​ளனர். தீயை பற்ற வைத்து விட்டு மூவரும் தப்​பி​யுள்​ளனர்.

போலீ​ஸார் வந்து விசா​ரணை நடத்​தி​னாலும், அது தீவிபத்து போல்​தான் தெரிய​வரும் என்று அவர்​கள் நம்​பி​யுள்​ளனர். அம்​ரி​தா, தடய​ அறி​வியல் மாணவி என்​ப​தால் சாட்​சி​யங்​கள் இல்​லாமல் கொலை செய்​வது எப்​படி என்​பதை அறிந்​துள்​ளார். ராம் கேஷின் உடலில் எண்​ணெய், நெய், ஒயின் ஆகிய​வற்றை ஊற்றி பற்ற வைத்​துள்​ளனர். மேலும், வீட்​டின் கம்ப்​யூட்​டரிலிருந்த ஹார்ட் டிஸ்க் உள்​ளிட்ட பொருட்​களு​டன்​ தப்​பி​யுள்​ளனர்​. ஆ​னால், சிசிடிவி கேம​ரா அவர்​கள்​ செய்​த குற்​றத்​தை ​காட்​டிக்​கொடுத்​து​விட்​டது. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x