Published : 28 Oct 2025 09:47 AM
Last Updated : 28 Oct 2025 09:47 AM

பாஜக பிரமுகர் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மகேந்திர நாகர். இவர் அதே ஊரைச் சேர்ந்த ராம்ஸ்வரூப் என்ற விவசாயியின் (40) நிலத்தைக் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார்.

இந்​நிலை​யில், ராம்​ஸ்​வரூப் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை தனது நிலத்​துக்கு சென்​றுள்​ளார். அப்​போது மகேந்​திர நாகர் மற்​றும் 10-க்​கும் மேற்​பட்ட அடி​யாட்​கள் ராம்​ஸ்​வரூப்பை கடுமை​யாக தாக்கி உள்​ளனர். பின்​னர் நிலைகுலைந்து போயிருந்த ராம்​ஸ்​வரூப் மீது ‘தார்’ ஜீப்பை ஏற்றி உள்​ளனர். இதில் அவர் உயி​ரிழந்​தார். இது குறித்து போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x