Published : 28 Oct 2025 06:38 AM
Last Updated : 28 Oct 2025 06:38 AM

சென்னை | இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு; 10 பேர் கைது

சென்னை: சென்னை பச்​சையப்​பன் கல்​லூரி மாணவர் அரசன் (22). இவருக்​கும் மதுர​வாயல் ஏரிக்​கரையை சேர்ந்த எம்​ஜிஆர் சட்டக் கல்​லூரி மாணவர் நவீன் குமார் (23) என்​பவருக்​கும் 3 மாதங்​களுக்கு முன் தகராறு ஏற்​பட்​டது. இதில் அரசனை, நவீன்​கு​மார், அவரது நண்​பர்​கள் தாக்​கி​யுள்​ளனர். இதுகுறித்து அரசன் தனது நண்பர் மாயஜோதி (21) என்​பவரிடம் கூறி​யுள்​ளார்.

நவீன் குமாரிடம் மாயஜோதி இதுகுறித்து கேட்டு வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இதன் காரண​மாக இருதரப்​புக்​கும் இடையே கடந்த சில நாட்​களாக பிரச்​சினை இருந்து வந்​தது.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு மாயஜோதி மற்​றும் அவரது நண்​பர்​களான விக்​னேஷ், அஜித்​கு​மார், ஆஷிக் மற்​றும் ஜெஸ்​டின் ஆகியோர் சேர்ந்து நவீன்குமார் வீட்​டுக்கு சென்று மது போதை​யில் தகராறு செய்​துள்​ளனர். தகராறு முற்​றிய நிலை​யில் ஒரு​வரை ஒரு​வர் மாறி மாறி கைகளாலும், கற்​களாலும் தாக்​கிக் கொண்டுள்ளனர்.

இந்த மோதலில் நவீன் குமாரின் நண்​பர் சூர்யா (19) என்​பவர் திடீரென பேப்​ப​ரால் செய்த நாட்டு வெடிகுண்டை வீசி​ய​தில் மாயஜோ​தி​யின் நண்​பர், விக்​னேஷ் என்​பவருக்கு காலில் காயம் ஏற்​பட்​டது. தகவல் அறிந்து மதுர​வாயல் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து சென்று இரு தரப்​பை​யும் சேர்ந்த மொத்​தம் 10 பேரை கைது செய்​தனர். மேலும் தலைமறை​வாக உள்ள சிலரை தேடிவரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x