Published : 27 Oct 2025 06:59 AM
Last Updated : 27 Oct 2025 06:59 AM

மாணவி​களுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது 

தஞ்​சாவூர்: தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்டை அரு​கே​யுள்ள எட்​டுப் ​புளிக்​காடு கிராமத்​தில் செயல்​படும் அரசு நடுநிலைப் பள்​ளி​யில் கத்​திரிக்​கொல்லை பகு​தி​யைச் சேர்ந்த பாஸ்​கர்​(53) என்​பவர் ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வரு​கிறார். இவர், சில நாட்​களுக்கு முன்பு மாணவி ஒரு​வரிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டுள்​ளார்.

இதுகுறித்து மாண​வி​யின் பெற்​றோர், பள்​ளித் தலைமை ஆசிரியை நரி​யம்​பாளை​யம் விஜ​யா​விடம்​(55) புகார் தெரி​வித்​துள்​ளனர். ஆனால், அந்​தப் புகார் மீது முறை​யான நடவடிக்கை எடுக்​கவில்லை. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பட்​டுக்​கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

இதுகுறித்து போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், ஆசிரியர் பாஸ்​கர் 7 மாணவி​களிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்​து, ஆசிரியர் பாஸ்​கர் மற்​றும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்​காத தலைமை ஆசிரியை விஜயா ஆகியோர் மீது போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், இரு​வரை​யும் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். இதற்​கிடை​யில், இரு​வரை​யும் சஸ்​பெண்ட் செய்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் உத்​தர​விட்டு​உள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x