Published : 26 Oct 2025 12:55 AM
Last Updated : 26 Oct 2025 12:55 AM

கோவையில் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு திரும்பியபோது பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் 5 இளைஞர்கள் உயிரிழப்பு

கோவை: கோவை​யில் பிறந்த நாளைக் கொண்​டாடி​விட்டு காரில் திரும்​பிய இளைஞர்​கள் 5 பேர், சாலை​யோரம் இருந்த மரத்​தில் கார் மோதி​ய​தில் உயி​ரிழந்​தனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் பேராவூரணி​யைச் சேர்ந்த முரு​கேசன் மகன் பிர​காஷ்(22), வேலா​யுதம் மகன் பிர​பாகரன்​(19), பூக்​கொல்​லை​யைச் சேர்ந்த நாடி​முத்து மகன் ஹரிஷ்(20), புதுக்​கோட்டை மாவட்​டம் குமாரமங்​கலத்​தைச் சேர்ந்த நாராயண​சாமி மகன் சபரி ஐயப்​பன்​(21), அரியலூர் மாவட்​டம் செந்​துறை தாலுக்​காவைச் சேர்ந்​தவர் ராம​சாமி மகன் அகத்​தி​யன்​(20) ஆகியோர் நண்​பர்​கள் ஆவர்.

இவர்​களில் பிர​காஷ், ஹரிஷ், சபரி ஐயப்​பன் ஆகியோர் கோவை பச்​சா​பாளை​யம் அருகே தங்​கி​யிருந்​து, செல்​வபுரத்​தில் உள்ள நான்கு சக்கர வாகன ப்ப​ராமரிப்பு நிறு​வனத்​தில் ஊழியர்​களாக பணி​யாற்றி வந்​தனர். அகத்​தி​யன், பிர​பாகரன் ஆகியோர் கோவை​யில் உள்ள தமிழ்​நாடு வேளாண்​மைப் பல்​கலைக்​கழகத்​தில் 3-ம் ஆண்டு படித்து வந்​தனர். இந்​நிலை​யில், 5 பேரும் நேற்று முன்​தினம் இரவு கோவை செல்​வபுரம் பகு​தி​யில்இருந்து காரில் பேரூர் பச்​சா​பாளை​யம் நோக்கி புறப்​பட்​டுச் சென்​றனர். காரை பிர​காஷ் ஓட்​டி​னார். காரை பிர​காஷ் அதிவேக​மாக ஓட்​டிச் சென்​ற​தாக கூறப்​படு​கிறது.

சிறு​வாணி பிர​தான சாலை​யில் பேரூர் செட்​டி​பாளை​யம் அருகே வந்த போது திடீரென ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார் சாலை​யோரம் உள்ள மரத்​தில் மோதி​யது. இதில், பிர​காஷ், ஹரிஷ், சபரி ஐயப்​பன் ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். தகவலறிந்து வந்த போலீ​ஸார், அகத்​தி​யன், பிர​பாகரன் ஆகியோரை மீட்​டு, மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். ஆனால், வழி​யிலேயே அகத்​தி​யன் உயி​ரிழந்​தார். கோவை அரசு மருத்​து​வ​மனை​யி்ல் சேர்க்​கப்​பட்ட பிர​பாகரன், சிகிச்சை பலனின்றி நேற்று மதி​யம் உயி​ரிழந்​தார். தொடர்ந்​து, 5 பேரின் உடல்​களும் பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன.

அதிவேகமாக சென்றபோது.. இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, "நேற்று முன்​தினம் ஹரிஷுக்கு பிறந்த நாள். இதையடுத்து நண்​பர்​கள் 5 பேரும் செல்​வபுரத்​தில் பிறந்த நாளைக் கொண்​டாடினர். அப்​போது அனை​வரும் மது அருந்​தி​ய​தாகத் தெரி​கிறது. பிறந்த நாள் கொண்​டாட்​டத்தை முடித்​து​விட்டு தாங்​கள் தங்​கி​யிருந்த அறைக்கு செல்​வதற்​காக காரில் அதிவேக​மாக சென்​ற​போது, விபத்​தில் நேரிட்​டுள்​ளது. தொடர்ந்​து வி​சா​ரித்​து வரு​கிறோம்​" என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x