Published : 24 Oct 2025 06:32 AM
Last Updated : 24 Oct 2025 06:32 AM

உளுந்தூர்பேட்டை அருகே தாயை கொன்ற 14 வயது சிறுவன் கைது

கள்ளக்குறிச்சி: உளுந்​தூர்​பேட்டை அருகே தாயை கொலை செய்த 14 வயது மகனை போலீ​ஸார் கைது செய்​தனர். கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்டை அடுத்த கீழக்​குப்​பம் வேலூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் குணசேகரன் மனைவி மகேஸ்​வரி. இவர்​களுக்கு 2 மகன்​கள், 2 மகள்கள் உள்​ளனர். குணசேகரனுக்கு மதுப் பழக்​க​மும் இருந்​ததால் கணவன், மனை​விக்​கிடையே அடிக்​கடி தகராறு ஏற்​படு​மாம்.

இதே​போல, கடந்த 19-ம் தேதி​யும் குணசேகரன் தம்​ப​திக்​கிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த குணசேகரன், மனைவி மகேஸ்​வரியை தாக்​கி​யுள்​ளார். பின்​னர் குணசேகரன் வெளியே சென்ற நிலை​யில், மகேஸ்​வரி தனது 14 வயது மகனிடம், “உனது தந்தை என்னை அடித்​த​போது ஏன் வேடிக்கை பார்த்​தாய்? நீ உனது தந்​தைக்கு ஆதர​வாக இருக்​கிறா​யா?” என்று கேட்​டு, அவரை அடித்​துள்​ளார். பின்​னர் மகேஸ்​வரி வயலுக்​குச் சென்​று​விட்​டார்.

வெகு நேர​மாகி​யும் அவர் வீடு திரும்​பாத​தால், அவரைத் தேடினர். அப்​போது அரு​கில் இருந்த விவ​சாய நிலத்​தில் மகேஸ்​வரி இறந்து கிடந்​தது தெரிய​வந்​தது. தகவலறிந்து வந்த திரு​நாவலூர் போலீ​ஸார் மகேஸ்​வரி​யின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக விழுப்​புரம் முண்​டி​யம்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

பிரேதப் பரிசோதனை​யில், மகேஸ்​வரி கழுத்தை நெறித்​துக் கொலை செய்​யப்​பட்​டது தெரிய​வந்​தது. இதுகுறித்து போலீ​ஸார் விசாரித்​த​தில், மகேஸ்​வரி​யின் 14 வயது மகன் அவரைக் கொலை செய்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து போலீ​ஸார் நேற்று முன்​தினம் அந்த சிறு​வனைப் பிடித்து விசா​ரணை நடத்​தினர்.

தாய் தன்னை அடித்​த​தால் கோப​முற்​று, வயல்​வெளி​யில் அவரின் கழுத்தை நெறித்​துக் கொலை செய்​த​தாக அச்​சிறு​வன் தெரி​வித்​துள்​ளான். பின்​னர் அந்த சிறு​வனைக் கைது செய்த போலீ​ஸார், உளுந்​தூர்​பேட்டை குற்​ற​வியல் நீதிபதி முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தி, கடலூர் சிறு​வர் சீர்​திருத்​தப்​ பள்​ளி​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x