Published : 22 Oct 2025 06:44 AM
Last Updated : 22 Oct 2025 06:44 AM

காங்கயம் அருகே சாலை விபத்து: சகோதரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கரண், மைத்ரேயன்

திருப்பூர்: ​காங்​க​யத்​தில் இருசக்கர வாக​னங்​கள் நேருக்கு நேர் மோதிய விபத்​தில், சகோ​தரர்​கள் உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். ஈரோடு மாவட்​டம் சென்​னிமலையை சேர்ந்​தவர் கலை​வாணி (46). டெய்​லர். இவரது கணவர் கார்த்​தி, கடந்த 4 ஆண்​டு​களுக்கு முன்பு உயி​ரிழந்​தார். இவர்​களது மகன்​கள் மைத்​ரேயன் (21). கரண் (12) மூத்த மகன் கல்​லூரி​யில் படித்து வந்​தார். இளைய மகன் 8-ம் வகுப்பு படித்து வந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி இரவு தாய் மற்​றும் மகன்​கள் சென்​னிமலை​யில் இருந்து பரஞ்​சேர் வழி​யாக திட்​டுப்​பாறை நோக்கி இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தனர். மைத்​ரேயன் வாக​னத்தை ஓட்​டிச்​சென்​றார். அப்​போது, அப்​பகு​தி​யில் உள்ள கல்​கு​வாரி​யில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துகி​ராம்​தாஸ் (27), திலீப்​தாஸ் (31), பிகாஸ் மாலிக் (18) ஆகியோர் எதிர்​திசை​யில் இருசக்கர வாக​னத்​தில் வந்து கொண்​டிருந்​தனர்.

3 பேர் பலத்த காயம்... எதிர்​பா​ரா​வித​மாக இரண்டு 2 சக்கர வாக​னங்​களுக்​கும் நேருக்கு நேர் மோதின. இதில் 6 பேருக்​கும் பலத்த காயம் ஏற்​பட்​டது. சம்பவ இடத்​திலேயே மைத்​ரேயன், கரண் மற்​றும் துகி​ராம்​தாஸ் ஆகியோர் உயி​ரிழந்​தனர். காயமடைந்த மற்ற 3 பேரும் திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். விபத்து தொடர்​பாக காங்​க​யம் போலீ​ஸார் வழக்கு பதிந்து விசா​ரிக்​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x