Published : 20 Oct 2025 06:13 AM
Last Updated : 20 Oct 2025 06:13 AM

ராமதாஸ், அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: குடியரசு துணைத் தலைவர் வீட்டிலும் சோதனை 

சென்னை: சென்​னை​யில் உள்ள குடியரசு துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன் வீட்​டுக்கு 2-வது முறை​யாக மர்ம நபர்​கள் வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தனர். பாமக நிறு​வனர் ராம​தாஸின் தைலாபுரம் வீடு, சென்​னை​யில் உள்ள பாமக அலு​வல​கம் ஆகிய இடங்​களுக்​கும் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

முதல்​வர், அமைச்​சர்​கள், கல்வி நிறு​வனங்​கள், வணிக நிறு​வனங்​கள், வழி​பாட்​டுத் தலங்​கள், நடிகர், நடிகைகள் வீடு, ஆளுநர் மாளி​கை, விமான நிலை​யம், வெளி​நாட்டு தூதரகங்​கள் என பல்​வேறு இடங்​களுக்கு அண்​மைக்​கால​மாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. போலீ​ஸார் நடத்​தும் சோதனை​களில் மிரட்​டல் வெறும் புரளி என்​பது தெரிய​வரு​கிறது.

இந்​நிலை​யில், டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று முன்​தினம் நள்​ளிரவு இ-மெ​யில் ஒன்று வந்​தது. அதில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வீட்​டில் வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

மேலும், திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள பாமக நிறு​வனர் ராம​தாஸ் வீடு, சென்னை தி.நகரில் உள்ள பாமக தலை​வர் அன்​புமணி​யின் வீடு (இது பாமக அலு​வல​க​மாக செயல்​பட்டு வரு​கிறது), கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை, அண்ணா சாலை​யில் உள்ள தர்​கா, அமெரிக்க துணை தூதரகம் ஆகிய இடங்​களி​லும் வெடிகுண்டு வைத்​திருப்​ப​தாக மிரட்​டல் வந்​தது.

இதையடுத்​து, போலீ​ஸார் வெடிகுண்டு நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய் உதவி​யுடன் சென்னை போயஸ் கார்​டனில் உள்ள சி.பி ராதாகிருஷ்ணன் வீடு முழு​வதும் சோதனை நடத்​தினர். ராம​தாஸ் வீடு, அன்​புமணி வீடு உட்பட மிரட்​டல் விடுக்​கப்​பட்ட அனைத்து இடங்​களி​லும் சோதனை நடத்​தப்​பட்​டது. சோதனை​யில் வெடிகுண்டு எது​வும் சிக்​க​வில்​லை. வெடிகுண்டு மிரட்​டல் வெறும் புரளி என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x