Published : 18 Oct 2025 06:54 AM
Last Updated : 18 Oct 2025 06:54 AM

பொன்னேரி | அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

பொன்னேரி: சென்​னை, திரு​வொற்​றியூர் அருகே விம்கோ நகரில் அண்​ணனை கொன்ற தம்​பிக்கு ஆயுள் தண்​டனை விதித்​து, பொன்​னேரி- கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​துள்​ளது. சென்​னை, திரு​வொற்​றியூர் அருகே உள்ள விம்கோ நகர் பகு​தியை சேர்ந்​தவர் சுரேஷ் (35).

இவரது தம்பி ராஜேஷ் (33). இவர்​கள் இரு​வருக்​கும் இடையே குடும்ப பிரச்​சினை காரண​மாக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தகராறு ஏற்​பட்​டது. அப்​போது, சகோ​தரர்​கள் இரு​வரும் மது​போதை​யில் இருந்த நிலை​யில், ராஜேஷ், அண்​ணன் சுரேஷ் தலை​யில் அம்மி கல்லை போட்டு அவரை கொலை செய்​தார்.

இந்த கொலை தொடர்​பாக எண்​ணூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, ராஜேஷை கைது செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை, பொன்​னேரி​யில் உள்ள கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம்​-4-ல் நடந்து வந்​தது. இதில், அரசு தரப்​பில் வழக்​கறிஞர் கே.ஆர்​.லாசர் வாதிட்​டார். வழக்கு விசா​ரணை முடி​வில், ராஜேஷ் மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டது.

இதனையடுத்​து, நேற்று முன் தினம் பொன்​னேரி, கூடு​தல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றம்​-4-ன் நீதிபதி சிவகு​மார் தீர்ப்பு அளித்​தார். அதில் ராஜேஷுக்​கு, சுரேஷை கொலை செய்​வதற்​காக வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்த குற்​றத்​துக்​காக 10 ஆண்​டு​கள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், சுரேஷை கொலை செய்த குற்​றத்​துக்​காக ஆயுள் தண்​டனை, ரூ.1,000 அபராதம் விதிக்​கப்​பட்​டது. தண்டனை​களை ராஜேஷ் ஏக காலத்​தில் அனுபவிக்க வேண்​டும் என நீதிபதி தன் தீர்ப்​பில் தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x