Published : 14 Oct 2025 07:30 AM
Last Updated : 14 Oct 2025 07:30 AM

சென்னை | பூங்கா மற்றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விக்கிரவாண்டியில் மது போதை ஆசாமி கைது

சென்னை: மதுர​வாயலில் உள்ள பூங்கா மற்​றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சென்னை எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் செல்​போன் அழைப்பு ஒன்று வந்​தது.

எதிர் முனை​யில் பேசிய நபர், ``மதுர​வாயல் பல்​ல​வன் நகரில் உள்ள பூங்கா மற்​றும் அதன் அரு​கில் உள்ள கோயி​லில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்​தில் வெடிக்​கும்'' எனக் கூறி இணைப்​பைத் துண்​டித்​தார். காவல் கட்​டுப்​பாட்​டறை போலீ​ஸார் உடனடி​யாக போலீஸ் உயர் அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தனர்.

2 இடங்களிலும் சோதனை: இதையடுத்து மதுர​வாயல் காவல் நிலைய போலீ​ஸார் வெடிகுண்​டு​களைக் கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய் உதவி​யுடன் மிரட்​டலுக்கு உள்​ளான 2 இடங்​களுக்​கும் விரைந்து சோதனை நடத்​தினர்.

முடி​வில் சந்​தேகப்​படும்​படி​யான பொருட்​கள் எது​வும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே, புரளியைக் கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இந்த விவ​காரம் தொடர்​பாக மதுர​வாயல் போலீ​ஸார் விசா​ரணை​யைத் தொடங்​கினர். முதல் கட்​ட​மாக மிரட்​டல் வந்த செல்​போன் எண்ணை அடிப்​படை​யாக வைத்து சைபர் க்ரைம் போலீ​ஸார் உதவி​யுடன் விசாரிக்கப்பட்​டது.

இதில், வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தது விழுப்​புரம் மாவட்​டம், விக்​கிர​வாண்டி பகு​தி​யைச் சேர்ந்த பூபதி (43) என்​பது தெரிய​வந்​தது. அவர் கூலி வேலை செய்து வரு​வதும், மது போதை​யில் வெடிகுண்டு வைத்​திருப்​ப​தாக காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு மிரட்​டல் விடுத்​திருப்​பதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவரை போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x