Published : 13 Oct 2025 06:39 AM
Last Updated : 13 Oct 2025 06:39 AM

​முதல்​வர் ஸ்டா​லின் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த மாற்​றுத் திற​னாளி கைது

சென்னை: முதல்​வர் ஸ்டா​லின் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த மாற்​றுத் திற​னாளியை போலீ​ஸார் கைது செய்​தனர்.
சென்னை காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் மதி​யம் அழைப்பு ஒன்று வந்​தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய நபர் சென்னை தேனாம்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலை​யில் உள்ள முதல்​வர் ஸ்டா​லின் வீட்​டில் வெடிகுண்டு வைத்​திருப்​ப​தாக கூறி​விட்டு அழைப்​பைத் துண்​டித்​தார்.

இதுகுறித்து தேனாம்​பேட்டை போலீ​ஸாருக்கு தகவல் கொடுக்​கப்​பட்​டது. விரைந்து வந்த போலீ​ஸார் வெடிகுண்டு நிபுணர்​கள், மோப்ப நாய் உதவி​யுடன் முதல்​வர் ஸ்டா​லின் வீட்​டில் சோதனை நடத்​தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், வெடிகுண்டு மிரட்​டல் புரளி என்​பதும் தெரிய​வந்​தது.

இதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார், வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த நபர் யார் என விசா​ரணை நடத்​தினர். விசா​ரணை​யில் அந்த நபர் செங்​கல்​பட்டு மாவட்​டம் திருப்​போரூரைச் சேர்ந்த ஐயப்​பன் (36) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை போலீ​ஸார் கைதுசெய்து விசா​ரணை நடத்தினர்.

விசா​ரணை குறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “ஐயப்​பன் இளம் வயதிலேயே இளம்​பிள்ளை வாதத்​தால் இரு கால்​களும் பாதிக்​கப்​பட்ட மாற்​றுத் திற​னாளி ஆவார். இவர் குடிப்​பழக்​கத்​துக்கு அடிமை​யான​தால், அடிக்​கடி குடும்​பத்​தினருடன் தகராறில் ஈடு​பட்டு வந்​தார். அந்த வகை​யில், இவர் ஏற்​கெனவே கடந்த 2020-ம் ஆண்டு கோயம்​பேடு பேருந்து நிலை​யம், எழும்​பூர் ரயில் நிலை​யம், சென்னை விமான நிலை​யத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​ததற்​காக கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

பின்​னர் வெளியே வந்த அவர், குடும்​பத் தகராறில் 2021-ம் ஆண்டு முதல்​வர் ஸ்டா​லின் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தார். அப்​போதும் அவரை கைது செய்து சிறை​யில் அடைத்​தோம். இந்​நிலை​யில் தற்​போது மீண்​டும் முதல்​வர் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​துள்​ளார். இவர் தொடர்ந்து இத்​தகைய செயலில் ஈடு​பட்டு வரு​கிறார். எனினும் அவருக்கு பள்​ளி​யில் படிக்​கும் 2 பெண் குழந்​தைகள் இருப்​ப​தால், அவரது குடும்​பத்​தின் நலனைக் கருத்​தில் கொண்​டு, அவரை எச்​சரித்து மனித நேயத்​துடன் மனை​வி​யுடன் அனுப்பி வைத்​தோம். ஆனாலும்​ அவரது நடவடிக்​கைகளைத்​ தொடர்ந்​து
கண்​காணிப்போம்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x