Published : 13 Oct 2025 06:37 AM
Last Updated : 13 Oct 2025 06:37 AM

சென்னை | ஆர்.ஏ.புரத்​தில் வீட்​டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, பணத்தை திருடிய நபர் சிறையிலடைப்பு

சென்னை: அபி​ராமபுரத்​தில் வீட்​டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, பணத்தை திருடிய நபரை போலீ​ஸார் சிறையில் அடைத்தனர். சென்னை ஆர்​.ஏ.புரம் வல்​லீஸ்​வரன் தோட்​டம் பகு​தி​யில் வசித்து வருபவர் ராஜா(40). பழைய பொருட்​கள் வாங்கிவிற்கும் தொழில் செய்து வரு​கிறார். கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காலை வீட்டை பூட்​டி​விட்டு குடும்​பத்​துடன் ராஜா வெளியே சென்​று​விட்​டார்.

பின்​னர், மாலை​யில் திரும்பி வந்​த​போது, வீட்​டின் பூட்டு உடைக்​கப்​பட்​டிருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தார். உள்ளே சென்று பார்த்​த​போது, பீரோ​வில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1 லட்​சம் பணம் திருடு போயிருந்​தது தெரிய​வந்​தது. இதுகுறித்த புகாரின்​பேரில் அபி​ராமபுரம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வந்​தனர்.

மேலும், கடந்த 7-ம் தேதி அதேபகு​தியை சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் சரவணன் (38) என்​பவரது வீட்​டின் பூட்டை உடைத்து 2 கிராம் தங்​கம், ரூ.15,000 பணம் திருடப்பட்ட​தாக வந்த புகார் குறித்​தும் அபி​ராமபுரம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி வந்தனர்.

விசா​ரணை​யில் இரண்டு வீட்​டிலும் திருடியது ஒரே நபர்​தான் என்​பது தெரிய​வந்​தது. இதுகுறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி​ய​தில், ஆர்​.ஏ. புரத்தை சேர்ந்த சரவணன் (35) என்​பவர் திருட்டில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. இதையடுத்து நேற்று முன்​தினம் அவரை போலீ​ஸார் கைது செய்​து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x