Published : 13 Oct 2025 06:09 AM
Last Updated : 13 Oct 2025 06:09 AM

2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

திருச்சி: ​திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் 2 மாணவி​களுக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்​த​தாக எழுந்த புகாரில், 2 பேராசிரியர்​களுக்கு கட்​டாய ஓய்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழகத்​தில் பொருளா​தா​ரத் துறை​யின் தலை​வ​ராகப் பணி​யாற்​றி, பின்​னர் வணி​க​வியல் துறைக்கு மாற்​றப்​பட்​ட​வர் பேராசிரியர் எஸ்​.கணேசன்.

தொலை உணர்​வுத் துறை​யின் இணைப் பேராசிரியர் டி.ரமேஷ். இவர்​கள் இரு​வர் மீதும் 2 மாணவி​கள் தனித்​தனி​யாக பாலியல் துன்​புறுத்​தல் புகார்​கள் அளித்​திருந்​தனர்.

இதுகுறித்து பல்​கலைக்​கழகத்​தின் உள்ளக புகார் குழு விசா​ரணை நடத்​தி​யது. விசா​ரணை​யின் முடி​வில், இரு​வரும் மாணவி​களிடம் தவறாக நடக்க முயன்​றது உறுதி செய்​யப்​பட்​டதை அடுத்​து, அவர்​களைப் பணி நீக்​கம் அல்​லது கட்​டாய ஓய்​வில் அனுப்ப கடந்த செப்​டம்​பர் 22 அன்று நடை​பெற்ற சிண்​டிகேட் கூட்​டத்​தில் பரிந்​துரைக்​கப்​பட்​டது.

இந்​தப் பரிந்​துரையை ஏற்​று, இரு​வருக்​கும் கட்​டாய ஓய்வு அளிக்​கும் பல்​கலைக்​கழகத்​தின் முடிவுக்கு கல்​லூரிக் கல்வி ஆணை​யர் இ.சுந்​தர​வல்லி ஒப்​புதல் அளித்​துள்​ளார். இதற்​கிடையே பேராசிரியர் கணேசன், தன் தரப்பு நியா​யத்தை எடுத்​துரைக்க வாய்ப்பு வழங்க வேண்​டும் என பட்​டியலின தேசிய ஆணை​யத்​துக்​கு(என்​சிஎஸ்​சி) செப்​.25-ம் தேதி கடிதம் அனுப்பி உள்​ளார்.

இதற்​கிடையே, பல்​கலைக்​கழக நிர்​வாகம் கடந்த 3 தினங்​களுக்கு முன்பு நிர்​வாக ரீதி​யாக எடுத்த நடவடிக்​கைகள் தொடர்​பான ஆணை​களை, 2 பேராசிரியர்​களும் பெற்​றுக் கொள்​ள​வில்லை எனவும், அவர்​கள் இரு​வரும் நீதி​மன்​றத்தை நாட முடிவு செய்​துள்​ள​தாக​வும் தெரிய​வரு​கிறது.

மேலும், இதே​போல பல்​கலைக்​கழகத்​தில் 6 பேராசிரியர்​கள் மீது பாலியல் புகார்​கள் உள்ளன என்​றும், அவர்​கள் மீது ஏன் இது​வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்​றும் பேராசிரியர்​கள் குழு என்ற பெயரில் பதி​வாளர், கல்​லூரி கல்வி ஆணை​யர், உயர்​கல்​வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அதேவேளை​யில் கடந்த 10 ஆண்​டு​களில் இது​போன்று பல பாலியல் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​த​போதும், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது துறை ரீதி​யான இடமாற்​றம் போன்ற சிறிய தண்​டனை​களே வழங்​கப்​பட்டு வந்த நிலை​யில், தற்​போது எடுக்​கப்​பட்​டுள்ள இந்​தக் கடுமை​யான நடவடிக்கை பல்​கலைக்​கழக வட்​டாரத்​தில் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து பல்​கலைக்​கழகம் தரப்​பில் கூறியது: திருச்சி பார​தி​தாசன் பல்​கலைக்​கழக துணைவேந்​தர் குழு கன்​வீன​ராக, கல்லூரிக் கல்வி ஆணை​யர் சுந்​தர​வல்லி நியமிக்​கப்​பட்​ட​தில் இருந்து பல்​வேறு முக்​கிய நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார்.

இது​போன்ற புகார்​கள் வந்​தால் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்​துரைக்​கிறார். தற்​போது 2 மாணவி​கள் புகார் அளித்த விவ​காரத்​தில், நடவடிக்​கைக்கு உள்​ளான பேராசிரியர்​கள் அனுப்​பிய வாட்​ஸ்​அப் மெசேஜ்கள் உள்​ளிட்ட ஆதா​ரங்​கள் இருந்​த​தால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x