Published : 11 Oct 2025 06:52 AM
Last Updated : 11 Oct 2025 06:52 AM

சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்ததாரரிடம் போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மோசடி செய்த இருவர் கைது

புண்ணியகோட்டி, மஹா கணேஷ்

சென்னை: ​சென்னை அடை​யாரை சேர்ந்​த ஜெயக்​கு​மார்​(57) சென்னை குடிநீர் வாரி​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட ஒப்​பந்​த​தா​ர​ராக உள்​ளார். இவர் அண்​மை​யில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு ஒன்றை தாக்​கல் செய்​தார். அந்த மனு​வில், “சென்னை வெள்​ளனூரை சேர்ந்த ஓட்​டுநர் புண்​ணி​ய கோட்​டி(38), திரு​முல்​லை​வாயலை சேர்ந்த ரியல் எஸ்​டேட் அதிபர் மஹா கணேஷ்(37) ஆகியோர் நண்​பர்​கள் மூலம் எனக்கு அறி​முக​மா​னார்​கள்.

இவர்​கள் இரு​வரும், பால​வாக்​கம், பல்​கலை நகரில் 2,400 சதுர அடி இடத்தை ரூ.2 கோடிக்கு என்​னிடம் விற்​றனர். இந்​நிலை​யில், அந்த இடத்​தின் உரிமை​யாளர் சரவணவேல் என்​பவர் என்​னிடம் புகார் கூறிய பிறகு​தான், ஆள்​மாறாட்​டம் செய்து போலி ஆவணம் மூலம் அந்த இடத்தை இரு​வரும் என்​னிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஏமாற்​றியது தெரிய​வந்​தது. எனவே, புண்​ணி​யகோட்​டி, மஹா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என அந்த மனு​வில் குறிப்​பிட்​டிருந்​தார்.

மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரித்து நடவடிக்கை எடுக்க உத்​தர​விட்​டது. நீதி​மன்றம் உத்​தர​வின் பேரில் கடந்த மாதம் 9-ம் தேதி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து விசா​ரணை நடத்தி வந்​தனர். விசா​ரணை​யில் ரூ.2 கோடி மோசடி செய்​தது உறு​தி​யானதைத் தொடர்ந்​து, புண்​ணி​யகோட்​டி, மஹா கணேஷ் ஆகியோரை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். மேலும் இவ்​வழக்​கில் தொடர்​புடைவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x