Published : 10 Oct 2025 06:14 AM
Last Updated : 10 Oct 2025 06:14 AM

சென்னை | வாடகைதாரர் வீட்டில் நகை, பணம் திருட்டு: வீட்டு உரிமையாளரின் மகன் கைது

சென்னை: சூளைமேடு பெரி​யார் பாதை பகு​தி​யில் வாடகை வீட்​டில், 2-வது தளத்​தில் வசிப்​பர் ரமேஷ் (41). தனி​யார் நிறு​வனம் ஒன்றில் பணி செய்து வரு​கிறார். இவர் கடந்த மாதம் 30-ம் தேதி வீட்டை பூட்​டி​விட்டு வெளியூர் சென்​றார். பின்​னர், கடந்த 7-ம் தேதி வீடு வந்து பார்த்​த​போது கதவு உடைக்​கப்​பட​வில்​லை.

ஆனால், உள்ளே இருந்த பீரோ உடைக்​கப்​பட்டு அதில் வைக்​கப்​பட்​டிருந்த தங்க வளை​யல், கம்​மல் மற்​றும் பணம் திருடு​போ​யிருப்​பது தெரிய​வந்​தது. அதிர்ச்​சி​யடைந்த அவர் இது தொடர்​பாக வடபழனி காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், திருட்​டில் ஈடு​பட்​டது வீட்​டின் உரிமை​யாளரின் மகனான அருண்​கு​மார் (28) என்​பது தெரிந்​தது. வாடகை​தா​ரர் ரமேஷ் வீட்​டில் இல்​லாததை தெரிந்​து​கொண்டு ஜன்​னல் வழி​யாக நுழைந்து நகை, பணத்தை திருடிச் சென்​றது தெரிய​வந்​தது.
இதையடுத்து, அருண்​கு​மாரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x