Published : 10 Oct 2025 07:27 AM
Last Updated : 10 Oct 2025 07:27 AM

விஜய் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்த ஓட்டல் ஊழியர் கைது

உள்படம்: சபீக்

சென்னை: தவெக தலை​வர் விஜய் வீட்​டுக்கு 2-வது முறை​யாக வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த சம்​பவத்​தில் ஓட்​டல் ஊழியர் கைது செய்யப்பட்டார். தவெக தலை​வர் நடிகர் விஜய் வீட்​டுக்​குள் பலத்த பாதுகாப்பையும் தாண்டி கடந்த மாதம் 19-ம்தேதி இளைஞர் ஒருவர் புகுந்து மாடி​யில் பதுங்​கி​யிருந்​த சம்​பவம் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

பின்​னர் கடந்த மாதம் 28-ம் தேதி விஜய் வீட்​டுக்கு குண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டது. இதையடுத்​து, நடந்த சோதனையில், அது புரளி எனத் தெரிய​வந்​தது. இவ்​வாறு தொடர்ச்​சி​யாக விஜய்க்கு அச்​சுறுத்​தல் இருக்கும் நிலை​யில், நேற்று முன்​தினம் 2-வது முறை​யாக விஜய் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது.

உடனே் போலீஸார் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்​களு​டன் விரைந்து வந்து விஜய் வீட்டை சோதனை செய்​தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனை செய்த நிலை​யில், இது​வும் புரளி எனத் தெரியவந்​தது. இதையடுத்து நடந்த விசா​ரணை​யில், மிரட்டல் விடுத்த நபர் கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தைச் சேர்ந்த சபீக் ​(37) என்​பதும், மீனம்​பாக்​கத்​தில் உள்ள ஹோட்​டலில் வேலை செய்து வந்​ததும் தெரிய​வந்​தது.

விஜய் கன்​னி​யாகுமரி மாவட்​டத்​துக்கு பிரச்​சா​ரம் செய்ய வர இருப்​ப​தாக, யாரோ ஒரு​வர் அவரிடம் கூறியதை தொடர்ந்​து, கரூர் சம்​பவம் போல் நடந்து விடக்​கூ​டாது என்​ப​தற்​காக, மது​போதை​யில், சபீக் இவ்​வாறு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீ​ஸார் சிறை​யில் அடைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x