Published : 10 Oct 2025 06:10 AM
Last Updated : 10 Oct 2025 06:10 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ். ரவுடியான இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கேசவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. 2018-ல் வெங்கட்ராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கேசவன், அவரது சகோதரர் சந்தோஷ், உறவினர்கள் மாதேஷ், மல்லேகவுடா, பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட கேசவன் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT