Published : 07 Oct 2025 06:49 AM
Last Updated : 07 Oct 2025 06:49 AM

சமூக ஊடகங்களில் நீதிபதி குறித்து விமர்சனம்: தவெக நிர்வாகிகள் 2 பேர் உள்பட 4 பேர் கைது

சென்னை: சமூக ஊடகங்​களில் நீதிபதி குறித்து விமர்​சனம் செய்த தவெக நிர்​வாகி​கள் 2 பேர் உள்பட 4 பேர் கைது செய்​யப்​பட்டனர். தவெக தலை​வர் விஜய், கரூரில் கடந்த 27-ம் தேதி பங்​கேற்ற பிரச்​சார கூட்​டத்​தில் சிக்கி 41 பேர் பரி​தாப​மாக உயிரிழந்தனர். இந்த சம்​பவம் தொடர்​பான வழக்​கு, கடந்த 3-ம் தேதி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தது.

அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி, தவெக தலை​வர் விஜய்க்கு கண்​டனம் தெரி​வித்​தார். பிரச்​சார கூட்​டத்​துக்கு விஜய் சென்ற பேருந்து விபத்தை ஏற்​படுத்​தி​யது தொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்​யப்​ப​டாதது ஏன்? அந்த பேருந்தை ஏன் பறி​முதல் செய்​ய​வில்​லை? என்​றும் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பி​னார்.

இதற்​கிடையே, நீதிப​தி​யின் இந்த கருத்​துக்​கு, தவெக.வைச் சேர்ந்த சிலர் சமூக ஊடகங்​களில் கடுமை​யாக விமர்​சனம் செய்​தனர். அதைத்​தொடர்ந்​து, சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்​தனர்.

இதில், இச்​செயலில் ஈடு​பட்​டது புதுக்​கோட்​டையைச் சேர்ந்த தவெக நிர்​வாகி கண்​ணன்​(25), கிருஷ்ணகிரி மாவட்​டம் பர்​கூரைச் சேர்ந்த தவெக உறுப்​பினர் டேவிட்​(25), சென்னை அருகே உள்ள அஸ்​தி​னாபுரத்​தைச் சேர்ந்த அதி​முக தகவல் தொழில்​நுட்ப பிரிவு நிர்​வாகி சசிகு​மார் (48), தூத்​துக்குடி மாவட்​டம் வேம்​பார் பகு​தி​யைச் சேர்ந்த அந்​தோணி சகாய மைக்​கேல் ராஜ்(37) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து இந்த 4 பேரை​யும் சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​தனர். 4 பேரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​. இதற்​கிடையே, 4 பேரும் தங்​களது செயலுக்கு மன்​னிப்பு கேட்​கும் வீடியோ சமூக ஊடகங்​களில் வெளி​யானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x