Published : 07 Oct 2025 06:33 AM
Last Updated : 07 Oct 2025 06:33 AM

சென்னை | பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய காமெடி நடிகர் கைது

பாரதி கண்ணன், ரமேஷ்

சென்னை: பள்ளி மாண​வியை பாலியல் தொழிலில் தள்​ளிய காமெடி நடிகர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். அவர் அந்த மாண​வியை சினிமா துறையைச் சேர்ந்த பலருடன் அனுப்​பிய அதிர்ச்சி தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சென்​னை​யில் சில தனி​யார் தங்​கும் விடு​தி​களில் பாலியல் தொழில் நடப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இதையடுத்​து, பாலியல் தொழில் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கோயம்​பேடு, 100 அடி சாலை​யில் உள்ள தங்​கும் விடுதி ஒன்​றில் திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது அங்கு அடைத்து வைக்​கப்​பட்​டிருந்த 9-ம் வகுப்பு படிக்​கும் 15 வயது மாணவி ஒரு​வரை மீட்​டனர்.

அந்த சிறுமியை பாலியல் தொழிலில் தள்​ளிய​தாக ஆந்​திர மாநில துணை நடிகை நாகலட்​சுமி, அஞ்​சலி, கார்த்​திக் குமார் உள்​ளிட்ட 6 பேரை அடுத்​தடுத்து கைது செய்​தனர். தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், மாண​வி​யின் தந்தை திடீரென இறந்​து​போன​தால் அவரது தாய் வேறு ஒரு​வரை திரு​மணம் செய்து கொண்டு சென்​று​விட்​டார்.

இதனால் ஆதர​வின்றி தவித்த மாண​வி, தாயின் தோழி​யான கிளப் டான்​சர் பூங்​கொடி என்​பவரது வீட்​டில் தங்​கிப் படித்​துள்​ளார். ஆதர​வற்ற நிலை​யில் இருந்த மாண​வி​யிடம் பூங்​கொடி பணம், நகை, ஆடம்பர வாழ்க்கை என ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி லட்​சக்​கணக்​கில் பணம் சம்​பா​தித்​த​தாக கூறப்​படு​கிறது.

பூங்​கொடிக்கு வசதி படைத்த வாடிக்​கை​யாளர்​களை ஏற்​பாடு செய்து கொடுத்​தது சினிமா பட உதவி இயக்​குநரும், நகைச்​சுவை நடிகரு​மான சென்னை ராமாபுரத்​தைச் சேர்ந்த பாரதி கண்​ணன் (63) என்​பது தெரிந்​தது. அவரிடம் கோயம்​பேடு அனைத்து மகளிர் போலீ​ஸார் விசா​ரித்​த​போது, அவர் சினிமா துறையைச் சேர்ந்​தவர்​கள் உட்பட பலருக்கு மாண​வியை ஏற்​பாடு செய்து கொடுத்​துள்​ளது தெரிய​வந்​தது.

மேலும், அவரது நண்​பர் திரு​வள்​ளூர் மாவட்​டம், உளுந்தை ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வர் ரமேஷ் (40) என்​பவருக்​கும் இந்த வழக்​கில் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. பிரபல அரசி​யல் கட்​சி​யைச்​ சேர்ந்​த அவரை​யும்​ போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x