Published : 06 Oct 2025 07:01 AM
Last Updated : 06 Oct 2025 07:01 AM

சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் முயற்சி முறியடிப்பு: டிஜிட்டல் மோசடிக்கு பயன்பட்ட 44 சிம் பாக்ஸ் பறிமுதல்

சென்னை: சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றும் முயற்சியை முறியடித்த தமிழக சைபர் க்ரைம் போலீஸார், டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்திய 44 சிம் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர்.

அண்​மைக்கால​மாக மும்பை போலீஸ் மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் பேசுவது​போல் போனில் பேசி, ‘உங்​கள் மீது போதைப் பொருள் கடத்​தல் வழக்கு உள்​ளது. அதிலிருந்து விடுவிக்க வேண்​டும் என்​றால் நாங்​கள் கேட்​கும் பணத்தை கொடுக்க வேண்​டும்.

மறுத்​தால் வீடு தேடி வந்து கைது செய்​வோம். உங்​களை டிஜிட்​டல் கைது செய்​துள்​ளோம்’ என மோசடி கும்​பல் மிரட்​டுகிறது. மிரட்​டலுக்​குப் பயந்து பலர் பணத்தை இழந்​து, ஏமாந்து விடு​கின்​றனர். அந்த வகை​யில் கோடிக்​கணக்​கான ரூபாய் மோசடி நடந்துள்ளது.

கூடுதல் டிஜிபி உத்தரவு: இது​போன்ற மோசடிக்கு சிம் பாக்​ஸ்​-கள் (பல சிம் கார்​டு​களை கொண்ட ஒரு தொலைத்​தொடர்பு சாதனம்) பயன்​படுத்​தப்​பட்டு வரு​வ​தாக தமிழக காவல்​துறை​யின் சைபர் க்ரைம் போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. இதுகுறித்து விசா​ரணை நடத்த மாநில சைபர் க்ரைம் பிரிவு கூடு​தல் டிஜிபி சந்​தீப் மிட்​டல் உத்​தர​விட்​டார்.

வருவாய் இழப்பு... அதன்​படி, போலீ​ஸார் தமிழகம் முழு​வதும் சோதனை​யிட்​டனர். மேலும், சிம் பாக்ஸ் குறித்து விசா​ரித்​தனர். இந்த சிம் பாக்​ஸ்​கள் வெளி​நாட்​டிலிருந்து வரும் சர்​வ​தேச அழைப்​பு​களை உள்​நாட்டு அழைப்​பு​களாக மாற்றி விடும் தன்மை கொண்​டது. இதன் மூலம் அழைப்​புக் கட்​ட​ணம் மிக​வும் குறை​யும். இதனால், டெலி​காம் நிறு​வனங்​களுக்கு வரு​வாய் இழப்பு ஏற்படும்.

மேலும், சட்ட விரோத செயல்​களுக்​கும் இந்த சிம் பாக்​ஸ்​களை பயன்​படுத்த முடி​யும். அதன் அடிப்​படை​யிலேயே மோசடிக் கும்​பல் இந்த சிம் பாக்​ஸ்​களை பயன்​படுத்தி வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, சிம் பாக்ஸ் தொடர்​பாக தமிழகம் முழு​வதும் சோதனை நடத்​தப்​பட்​டது.

இதில், கடந்த 2 மாதங்​களில் 44 சிம் பாக்​ஸ்​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர். மேலும், டெல்​லி, பிஹார், மகா​ராஷ்டிரா மாநிலங்​களுக்​கு சென்​றும் சிம் பாக்​ஸ்​களை பறி​முதல் செய்​தனர். அது​மட்​டுமல்​லாமல், டெல்​லி​யில் தாரிக் அலாம் (19), அவரது கூட்​டாளி லோகேஷ் குமார் (19) ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். இவர்​கள் கூட்​டாளி​களு​டன் சேர்ந்து பல்​வேறு சைபர் மோசடி குற்​றங்​களில் ஈடு​பட்டு வந்​த​தாகவும், பலரை மோசடி செய்துள்ளதாகவும் போலீ​ஸார் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x