Published : 04 Oct 2025 06:23 AM
Last Updated : 04 Oct 2025 06:23 AM

சென்னை | கரூர் சம்பவம் குறித்து மிரட்டல் விடுத்த தவெக பிரமுகர் கைது

சென்னை: கோ​யம்​பேடு பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் உள்ள திரையரங்​கில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்​களிடம் யூடியூப் சேனல்​களை சேர்ந்த சிலர் பேட்டி எடுத்​தனர். அப்​போது கரூரில் நடிகர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசல் உயி​ரிழப்பு தொடர்​பாக​வும் ரசிகர்​களிடம் கேள்வி கேட்​டுள்​ளனர்.

அப்​போது, அங்கு வந்த இளைஞர் ஒரு​வர் தவெக​வுக்கு ஆதர​வாக பேசி​யதோடு, யூடியூபர்​களை ஆபாச​மாக பேசி, மிரட்​டல் விடுத்​துள்​ளார். இது குறித்து புகாரின் பேரில் கோயம்​பேடு போலீஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை செய்​தனர். இதில், ஆபாச​மாக பேசி மிரட்​டல் விடுத்​த விரு​கம்​பாக்​கம் ஆழ்​வார்​திருநகர் மீனாட்​சி​யம்​மன் நகரைச் சேர்ந்த தவெக பிர​முகர் கோகுல் (29) என்​பவரை கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x