Published : 03 Oct 2025 07:11 AM
Last Updated : 03 Oct 2025 07:11 AM

பூந்தமல்லி | அரசு பள்ளியில் அனுமதியின்றி பயிற்சி: ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 47 பேர் கைது

பூந்தமல்லி: ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் நூற்​றாண்டு விழாவை முன்​னிட்​டு, சென்​னை, ஐயப்​பன்​தாங்​கல் அரசு மேல்​நிலைப் பள்ளி வளாகத்​தில் சீருடை அணிந்த ஆர்​எஸ்​எஸ் அமைப்​பைச் சேர்ந்த 50-க்​கும் மேற்​பட்​டோர் நேற்று காலை குருபூஜை மற்​றும் ஷாகா பயிற்சி உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளை நடத்​தினர்.

உரிய அனு​ம​தி​யின்றி இந்​நிகழ்ச்​சிகள் நடப்​ப​தாக எஸ்​.ஆர்​.எம்​.சி. (போரூர்) போலீ​ஸாருக்​கு, பொது​மக்​கள் மூலம் புகார் சென்​றது. இதையடுத்து போலீ​ஸார் விசா​ரணை​யில் ஈடு​பட்​டனர். அதில் உரிய அனு​ம​தி​யின்றி அரசுப் பள்ளி வளாகத்​தில் உள்ள மைதானத்​தில் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பினர், பயிற்சி உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளை நடத்​தி​யது தெரிய​வந்​தது.

இதனால், உரிய அனு​ம​தி​யின்றி பயிற்சி உள்​ளிட்ட நிகழ்ச்​சிகளை நடத்​தி​ய​தாக வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், ஆர்​எஸ்​எஸ் நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் என 47 பேரைக் கைது செய்​து சமு​தாய நலக் கூடத்​தில் அடைத்​து​வைத்​து, மாலை​யில் விடு​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x