Published : 03 Oct 2025 07:07 AM
Last Updated : 03 Oct 2025 07:07 AM

மும்பையிலிருந்து வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் போதைப் பொருளாக விற்ற இளைஞர் கைது

சென்னை: உடல்​வலி நிவாரண மாத்​திரைகளை மும்​பையி​லிருந்து கடத்தி வந்​து, சென்​னை​யில் அதை போதைப் பொருளாக விற்​பனை செய்த இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்​வாளர்​கள் தலை​மை​யிலும் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி எம்​ஜிஆர் நகர் போலீ​ஸார் நேற்று முன்​தினம் அதே பகு​தி​யில் உள்ள அண்ணா மெயின் ரோட்​டில் உள்ள கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அருகே கண்​காணித்​தனர்.

அப்​போது அங்கு சந்​தேகத்​துக் கிட​மாக நின்று கொண்​டிருந்த இளைஞரிடம் விசா​ரணை செய்​யச் சென்​ற​போது, அந்த நபர் தப்​பியோட முயன்​றார். இதையடுத்து அவரை போலீ​ஸார் மடக்​கிப் பிடித்து விசா​ரித்​தனர். இதில் பிடிபட்​டது எம்​ஜிஆர் நகர், அண்ணா வீதி​யைச் சேர்ந்த சஞ்​ஜய் (25) என்​பது தெரிய​வந்​தது.

அவரிட​மிருந்து ஏராள​மான உடல் வலி நிவாரண மாத்​திரைகள் மற்​றும் 5 சிரிஞ்​சிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. போதைப் பொருளாக உடல் வலி நிவாண மாத்​திரைகளை விற்​பனை செய்ய, மும்​பையி​லிருந்து மொத்​த​மாக மாத்​திரைகளை கடத்தி வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, சஞ்​ஜய்யை போலீ​ஸார் கைதுசெய்து சிறை​யில் அடைத்​தனர். இவர் மீது ஏற்​கெனவே 7 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். தொடர்ந்​து வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x