Published : 30 Sep 2025 07:48 AM
Last Updated : 30 Sep 2025 07:48 AM

சென்னை | போக்குவரத்து போலீஸார் தள்ளியதில் வங்கி அதிகாரி உயிரிழப்பு

கரம்சந்த் காமராஜ்

சென்னை: செம்​பி​யம் போக்​கு​வரத்து போலீ​ஸார், மாதவரம் நெடுஞ்​சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்போது, அந்த வழி​யாக வந்த காரை தடுத்து நிறுத்​தி, ஓட்​டுநரிடம் விசா​ரித்​தனர்.

இதில், காரை ஓட்டி வந்​தது தனி​யார் வங்கி ஒன்​றில் அதி​காரி​யாக பணி​யாற்றி வரும் கொடுங்​கையூர், வெங்​கடேஸ்​வரா காலனியைச் சேர்ந்த கரம்​சந்த் காம​ராஜ் (50) என்​பது தெரிந்​தது. மேலும், அவர் மது​போதை​யில் காரை ஓட்டி வந்​த​தாக கூறி காரை பறி​முதல் செய்ய போலீ​ஸார் முற்​பட்​டனர்.

அப்​போது, காம​ராஜ் மது அருந்த வில்லை என்று கூறிய​தால், இருதரப்​பினரிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு தகராறாக மாறியது. இதில், கீழே விழுந்த கரம்​சந்த் காம​ராஜ் சுயநினை​வில்​லாமல் இருந்​த​தால், 108 ஆம்​புலன்ஸ் வரவழைக்​கப்​பட்​டது. அவர்​கள் வந்து காம​ராஜ் இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். இதையடுத்​து, தகவலறிந்து வந்த மகன் குரு சரண்​ராஜ், தனது தந்தையை மருத்​து​வ​மனைக்கு அழைத்து சென்று இறந்​திருப்​பதை உறுதி செய்​தார்.

இதையடுத்​து, குரு சரண்​ராஜ் போலீ​ஸார் தள்ளி விட்​ட​தாலேயே தந்தை இறந்​த​தாக​வும், போக்​கு​வரத்து எஸ்ஐ வினோத் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, செம்​பி​யம் போலீ​ஸில் புகார் அளித்​தார். ஆனால், உயி​ரிழந்த கரம்​சந்த் காம​ராஜ் 4 ஆண்​டு​களாக இதய பிரச்​சினைக்கு சிகிச்சை பெற்று வரு​வ​தாக​வும், நாங்​கள் தள்ளி விட​வில்​லை. அவராகவே தடு​மாறி விழுந்​தார் என போலீஸ் தரப்​பில் விளக்​கம் அளிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக, செம்​பி​யம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x