Published : 30 Sep 2025 09:40 AM
Last Updated : 30 Sep 2025 09:40 AM

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் குறித்து வதந்தி பரப்​பிய​தாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்பட்டுள்ளது. பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் வலை​தளங்களில் பதி​விடு​வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை காவல் ஆணை​யர் அருண் எச்சரித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் ஏராள​மான காணொலிகள் பரவி வரு​கின்​றன. இதில் போலியான, ஜோடிக்​கப்​பட்ட காணொலி​களும் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது​போன்ற பொய் செய்​தி​களை பரப்ப வேண்​டாம் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இந்​நிலை​யில், சென்னை காவல் ஆணை​யர் அருண் நேற்று ஒரு செய்​திக்​குறிப்பு வெளி​யிட்​டுள்​ளார். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கரூரில் நடை​பெற்ற அரசி​யல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து யாரும் எவ்​வித வதந்​தி​யை​யும் பரப்ப வேண்​டாம். விசா​ரணை அடிப்​படை​யில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலை​யில், வலை​தளங்​களில் சிலர் பரப்​பும் பொய் செய்​தி​கள் பொது​மக்​கள் அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யில் அமை​கிறது.

இதுதொடர்​பாக பெறப்​பட்ட புகார்​களின்​பேரில், பொது வெளி​யில் வதந்தி பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் செய்திகளை பதிவு செய்த வலைதள கணக்​காளர்​கள் 25 பேர் மீது வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

அவர்​கள் மீது கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். எனவே, மக்​களுக்கு அச்​சம் ஏற்​படுத்​தும் வகை​யிலும், பொது அமை​திக்கு பங்​கம் விளைவிக்​கும் வகை​யிலும் யாரும் சமூக வலை​தளங்​களில் பதி​விட வேண்​டாம். மீறி செயல்​படு​வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் எச்​சரித்​துள்​ளார்.

இதற்​கிடையே, கரூர் விவ​காரம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வதந்தி பரப்​பிய​தாக பாஜக கலை மற்​றும் கலாச்​சார பிரிவு மாநில செய​லா​ளர் சகா​யம் (38), தவெக மாங்​காடு உறுப்​பினர் சிவனேசன் (36), அதே கட்​சி​யின் ஆவடி வட்​டச் செய​லா​ளர் சரத்​கு​மார் (32) ஆகிய 3 பேரை சென்னை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மேலும், வதந்தி பரப்​பிய​வர்​கள் குறித்து சைபர் க்ரைம் போலீ​ஸார்​ வி​சா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x