Published : 27 Sep 2025 06:30 AM
Last Updated : 27 Sep 2025 06:30 AM

சென்னை | சினிமா கேமரா உதவியாளரை தாக்கி பணம் பறிப்பு: பொறியியல் மாணவர் கைது

சென்னை: சினி​மாத் துறை கேமரா உதவி​யாளரைத் தாக்கி பணப்​பறிப்​பில் ஈடு​பட்ட பொறி​யியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாலிகி​ராமம், பெரி​யார் தெரு​வில் வசிப்​பவர் ரெக்​ஸன் (25). சினிமா துறை​யில் கேமரா உதவியாளராக வேலை செய்து வரு​கிறார்.

இவர் நேற்று முன்​தினம் அதி​காலை கோயம்​பேடு, பூந்​தமல்லி நெடுஞ்​சாலை அருகே நண்​பருடன் பேசிக்​கொண்​டிருந்​தார். அப்போது அங்கு இருசக்கர வாக​னத்​தில் வந்த இளைஞர் ஒரு​வர், ரெக்​ஸனை தாக்​கி​விட்டு அவரிட​மிருந்த பணத்தை பறித்​துக் கொண்டு தப்​பி​னார்.

சுதா​ரித்​துக் கொண்ட ரெக்​ஸன், வழிப்​பறி​யில் ஈடு​பட்ட இளைஞரை மடக்​கிப் பிடித்​தார். பின்​னர் அந்த வழியாக வந்த கோயம்​பேடு ரோந்து போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தார். போலீ​ஸார் அவரை காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர். இதில் பிடிபட்​டது மதுர​வாயலைச் சேர்ந்த ஹரிஹரன் (22) என்​பதும், அவர் தனி​யார் பொறி​யியல் கல்​லூரி ஒன்​றில் படித்​து​வரு​வதும் தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x