Published : 25 Sep 2025 06:12 AM
Last Updated : 25 Sep 2025 06:12 AM

தனியார் நிறுவன அதிகாரியின் 162 பவுன் தங்க நகைகளை அடமானம் வைப்பதாக நூதன முறையில் ரூ.90 லட்சம் மோசடி

சென்னை: தனி​யார் நிறுவன அதி​காரி​யின் 162 பவுன் நகைகளை அடமானம் வைப்​ப​தாக நூதன முறை​யில் ரூ.90 லட்​சம் மோசடிசெய்த வங்கி ஊழியர்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை சைதாப்​பேட்​டை,விஜிபி சாலை​யில் வசிப்​பவர் சுலை​மான் (32). தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் அதி​காரி​யாக உள்​ளார்.

இவர் கிண்​டி, லாயர் ஜெக​நாதன் தெரு​வில் உள்ள தனி​யார் வங்​கி​யில் சேமிப்​புக் கணக்கு வைத்​துள்​ளார். அடிக்​கடி வங்​கிக்கு சென்று பணம் செலுத்​தி​யும், எடுத்​தும் வந்​த​தால் வங்கி மேலா​ளர் சாமி​நாதனுடன் பழக்​கம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, அவர் நீங்​கள் பணம் எடுக்க வங்​கிக்கு நேரில் வர வேண்​டாம். நானே ஊழியரை அனுப்​பு​கிறேன் என்று தெரி​வித்​த​தால் சுலை​மான் பணம் எடுக்க தேவைப்​படும்​போது, மேலா​ளர் சாமி​ நாதனை தொடர்பு கொண்​ட​வுடன் அவர் ஊழியர் ஒரு​வரை வீட்​டுக்கு அனுப்​பி, படிவங்​களை பூர்த்தி செய்து பணம் கொடுத்​து​விடு​வார்.

இது​போல கடந்த ஜூலை 2-ம் தேதி மேலா​ளர் சாமி​நாதனை சுலை​மான் தொடர்பு கொண்​டு, அவசரத் தேவைக்​காக நகைகளை அடகு வைக்க வேண்​டும் எனக் கேட்ட​போது, பிர​சாத் என்ற வங்​கிக் காசாளரை வீட்​டுக்கு அனுப்பி வைத்​தார்.

இதையடுத்​து, சுலை​மான் தன்​னிட​மிருந்த 162 பவுன் நகைகளை கொடுத்​து, படிவங்​களில் கையெழுத்​திட்​டுக் கொடுத்​தார். பின்​னர், மேலா​ளர் சாமி​நாதனை செல்​போனில் தொடர்பு கொண்​டு, அடமானம் வைத்த நகைக்​கான பணத்தை கேட்​ட ​போது, பல காரணங்களைக் கூறி காலம் தாழ்த்​தி​யுள்​ளார்.

சந்​தேகம் அடைந்த சுலைமான் ஜூலை 15-ம் தேதி வங்​கிக்கு சென்று விசா​ரித்​த​போது, மேலா​ளர் சாமி​நாதன் வங்​கி​யில் பலரிடம் இதே பாணி​யில் பண மோசடி​யில் ஈடு​பட்​ட​தால், சஸ்​பெண்ட்செய்யப்​பட்​டது தெரிய வந்​தது. அதிர்ச்சி அடைந்த சுலை​மான் இது தொடர்​பாக சைதாப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

விசா​ரணை​யில், புழு​தி​வாக்​கம், பஜனை கோயில் தெரு​வைச் சேர்ந்த காசாளர் பிர​சாத் (25), அவ்​வங்​கி​யின் ஊழியர்​கள், மேலா​ளர் சாமி​நாதனுடன் சேர்ந்​து, அவர் கொடுக்​கும் தங்க நகைகளை உபயோகத்​தில் இல்​லாத வாடிக்​கை​யாளர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் அடமானம் வைத்​து, போலி கையெழுத்து இட்டு பணம் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது.

இதே​போல்​தான், சுலை​மானின் 162 பவுன் நகைகளைஅடமானம் வைத்து ரூ.90 லட்​சம் பெற்​றதும் தெரிந்​தது. இதையடுத்​து, மோசடி​யில் ஈடு​பட்ட காசாளர் பிர​சாத், வங்கி இயக்க மேலா​ள​ரான கே.கே.நகரைச் சேர்ந்த திவாகர் (32) ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். மோசடிக்கு மூளை​யாகச் செயல்​பட்ட மேலா​ளர் சாமி​நாதன் தலைமறை​வாக உள்​ளார். அவரை தனிப்​படை அமைத்​து போலீ​ஸார்​ தேடிவரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x