Published : 24 Sep 2025 06:49 AM
Last Updated : 24 Sep 2025 06:49 AM

அமைச்சர் தியாகராஜன் வீடு உட்பட சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

கோப்புப் படம்

சென்னை: அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் வீடு உட்பட சென்​னை​யில் 5 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுவிக்​கப்பட்டது குறித்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தின் மின்னஞ்​சல் முகவரிக்கு விடுதலைச் சிறுத்​தைகள் கட்சி எம்​எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பெயரில் நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

அந்த மின்​னஞ்​சலில், சென்னை வர்த்தக மையத்​தி​லும், தமிழக தகவல் தொழில் ​நுட்​பத்​துறை அமைச்​சர் பழனிவேல் தியாகராஜனின் வீட்​டிலும் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும், அது சிறிது நேரத்​தில் வெடிக்​கும் எனவும் குறிப்​பிடப்பட்டிருந்தது. அத்​துடன், சென்னை கோட்​டை​யில் உள்ள கடற்​படை கேண்​டீன், புரசை​வாக்​கம் பிஎஸ்​என்​எல் அலு​வல​கம், தேனாம்​பேட்டை தலைமை கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் அலு​வல​கம் ஆகிய இடங்​களுக்​கும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, போலீ​ஸார் சென்னை பசுமை வழிச்​சாலை​யில் உள்ள அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் வீடு உட்பட மிரட்​டல் விடுக்​கப்​பட்ட 5 இடங்​களி​லும் வெடிகுண்டு நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் சென்று சோதனை நடத்​தினர். ஆனால், சந்​தேகப்​படும்​படியாக எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே, புரளியை கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்கப்பட்டது உறுதி செய்​யப்​பட்​டது. இந்த மிரட்​டல் குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். சென்​னை​யில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்​கப்​பட்டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x