Published : 23 Sep 2025 06:41 AM
Last Updated : 23 Sep 2025 06:41 AM
சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையம் ஆகிய மத்திய அரசு நிறுவனங்கள், திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்துக்கும் (பிஐபி) நேற்று வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்டிருந்தது.
அங்கெல்லாம் சோதனை நடத்தப்பட்டதில், சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. எனவே இது புரளி என தெரிய வந்தது.
வானிலை ஆய்வு மையத்துக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பெயரிலும், ஜிஎஸ்டி மற்றும் பிஐபி அலுலகத்துக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி பெயரிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டல் குறித்து நுங்கம்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT