Published : 22 Sep 2025 06:44 AM
Last Updated : 22 Sep 2025 06:44 AM

மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு: பிளம்பரை கொலை செய்தவர் கைது

சென்னை: மனை​வி​யுடன் திரு​மணத்தை மீறிய உறவில் இருந்த பிளம்​பரை, கத்​தி​யால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை பெருங்​குடி கல்​லுக்​குட்டை திரு​வள்​ளுவர் நகர் பகு​தியை சேர்ந்​தவர் அன்பு கணபதி (28). பிளம்​பர் வேலை செய்து வந்​தார். இவரது வீட்​டின் அருகே வசித்து வருபவர் ராஜதுரை (30). அன்பு கணப​திக்​கும், ராஜதுரை மனை​விக்​கும் இடையே கடந்த 6 மாதங்​களாக திரு​மணத்தை மீறிய உறவு இருந்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இது ராஜதுரைக்கு தெரிய​வந்​ததையடுத்​து, இரு​வரை​யும் கண்​டித்​துள்​ளார். மேலும், இதுதொடர்​பாக ராஜதுரைக்​கும், அவரது மனை​விக்​கும் இடையே நேற்​று​முன்​தினம் இரவு தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, ராஜதுரை மற்​றும் அன்பு கணப​தி​யின் குடும்​பத்​தினர்​கள் பேச்​சுவார்த்தை நடத்தி இப்​பிரச்​சினைக்கு முற்​றுப்​புள்ளி வைத்​துள்​ளனர்.

ஆனாலும், ஆத்​திரம் அடங்​காத ராஜதுரை, அனைத்து பிரச்​சினைக்​கும் அன்பு கணபதி தான் காரணம் என எண்​ணி, அவரை தீர்த்து கட்ட முடிவு செய்​தார். இந்​நிலை​யில், நேற்​று​முன்​தினம் இரவு வீட்​டின் அருகே நின்று கொண்​டிருந்த அன்பு கணப​தியை அழைத்​து, ‘நடந்​தது நடந்​த​தாக இருக்​கட்​டும். நான் அனைத்​தை​யும் மறந்​து​விட்​டேன். மது அருந்​தலாம் வா’ என, அவரை தனது பைக்​கில் அழைத்துக் கொண்டு பெருங்​குடி ரயில் நிலை​யம் அருகே சென்​றார்.

அங்கு இரு​வரும் மது அருந்​தி​யுள்​ளனர். போதை தலைக்​கேறிய நிலை​யில்​,‘என் மனைவி உ​ட​னா பேசுகிறாய்’ என கூறி, மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் அன்பு கணப​தியை குத்​தி​விட்டு ராஜதுரை அங்​கிருந்து தப்பி சென்​றார். ரத்த காயங்​களு​டன் கிடந்த அன்பு கணப​தியை அப்​பகு​தி​யாக வந்​தவர்​கள் மீட்டு ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அங்கு அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் அவர் ஏற்​கெ​னவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். இதுகுறித்​து, வழக்​குப் பதிவு செய்த துரைப்​பாக்​கம் போலீ​ஸார், ராஜதுரையை கைது செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x