Published : 22 Sep 2025 06:23 AM
Last Updated : 22 Sep 2025 06:23 AM

‘பிட்காயின்’ விவகாரத்தில் 6 பேரை கடத்திய கும்பல்: 2 பேர் கைது

கைது செய்யப்பட்ட அருண்குமார், பார்த்திபன்.

சென்னை: சென்னை ஆயிரம் விளக்​கில், ‘பிட்​கா​யின்’ மாற்​றும் விவ​காரத்​தில் 6 பேரை காரில் கடத்தி சென்ற கும்​பலால் பரபரப்பு ஏற்​பட்​டது. அதில், 2 பேரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சென்​னை, பழைய வண்​ணாரப்​பேட்​டை, சுப்​பு​ராயன் தெரு​வில் வசித்து வருபவர் தேசிக மூர்த்​தி(50). இவர் ஆயிரம் விளக்கு பகு​தி​யில் ரியல் எஸ்​டேட் மற்​றும் புரோக்​கிங் அலு​வல​கம் நடத்தி வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 18-ம் தேதி காலை அலு​வல​கத்​துக்கு புறப்​பட்டு சென்ற தேசிக மூர்த்தி இரவு வீடு திரும்​ப​வில்​லை.

மறு​நாள், காலை தேசிக மூர்த்​தி​யின் மகன் பரத்​(20) செல்​போனுக்கு அழைப்பு ஒன்று வந்​தது. அதில், பேசிய நபர்​கள், ரூ.5 லட்​சம் பணத்தை கொடுத்​தால் தான் தேசிக மூர்த்​தியை உயிரோடு அனுப்​புவோம் என கூறி போனை துண்​டித்​துள்​ளனர். இதைக்​கேட்டு அதிர்ச்சி அடைந்த பரத், தண்​டை​யார்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

புகாரின் பேரில் வழக்​குப் பதிவு செய்​து, தேசிக மூர்த்​தி​யின் செல்​போன் சிக்​னலை வைத்து விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்​நிலை​யில், நேற்​று​ முன்​தினம் காலை தேசிக மூர்த்தி செல்​போன் சிக்​னல், பெரம்​பூர் ரயில் நிலையம் அரு​கில் காட்​டியதை யடுத்​து, அப்​பகு​திக்கு போலீ​ஸார் விரைந்து சென்​றனர்.

அங்​கு, ஒரு கட்​டிடத்​துக்​குள் அடைத்து வைக்​கப்​பட்​டிருந்த தேசிக மூர்த்​தி​யுடன் இருந்த 6 பேரை மீட்டு காவல் நிலை​யம் அழைத்து வந்​தனர். மேலும், அவர்​களை அடைத்து வைத்​திருந்த 2 பேரை கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். விசா​ரணை குறித்து போலீ​ஸார் கூறுகை​யில், ‘முகப்​பேரை சேர்ந்த பாரதி என்ற பெண் பிட்​கா​யின் வாங்கி விற்​கும் வேலை செய்து வந்​தார்.

இதற்​காக தேசிக மூர்த்தி அலு​வல​கத்தை அவர் பயன்​படுத்தி வந்​துள்​ளார். இதில் கிடைக்​கும் லாபத்​தில் தேசிக மூர்த்​திக்​கும் பங்கு கொடுத்​துள்​ளார். இந்​நிலை​யில், புளியந்​தோப்பை சேர்ந்த அருண்​ கு​மார் (36), வியாசர்​பாடியை சேர்ந்த பார்த்​திபன் (55) உட்பட சிலர், தங்​களிடம் 1.50 லட்​சம் பிட்​கா​யின் உள்​ள​தாக​வும், அதை மாற்றி தரு​மாறும் பார​தி​யிடம் கேட்​டு, அவரது கணக்​குக்கு அனுப்பி உள்​ளனர்.

பாரதி மும்​பையை சேர்ந்த அகர்​வால் என்​பவர் மூலம் பிட்​கா​யினை மாற்​றும் நடவடிக்​கை​யில் ஈடு​பட்​டார். இதையடுத்​து, சென்​னை​யில் உள்ள தன் அலு​வலக ஊழியர்​கள் மூலம் அகர்​வால் ரூ.1.38 கோடியை கொடுத்​தனுப்​பி​யுள்​ளார். அவர்​கள் ஆயிரம் விளக்கு அலு​வல​கத்து வந்​தனர். பாரதி 1.50 லட்​சம் பிட்​கா​யினை, அகர்​வாலின் கணக்​குக்கு மாற்​றும்​போது, அந்த பிட்​கா​யின் காணா​மல் போன​தாக தெரி​கிறது.

இந்​நிலை​யில், அகர்​வாலின் கணக்​குக்கு பிட்​கா​யின் வராத​தால், அவரது அலு​வலக ஊழியர்​கள் பணத்தை கொடுக்​காமல் திரும்ப சென்​றனர். இதனால், பாரதி மற்​றும் அவரது நண்​பர்​கள் தங்​களை ஏமாற்​றி​விட்​ட​தாக, ஆயிரம் விளக்கு அலு​வல​கத்து வந்த அந்த கும்​பல், அலு​வல​கத்​தில் இருந்த தேசிக மூர்த்​தி, பாரதி மற்​றும் அவரது நண்​பர்​கள் உள்பட 6 பேரை தாக்கி பணம் கொடுக்​கும்படி மிரட்டி அவர்​களை காரில் கடத்தி சென்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், பெரம்​பூர் அருகே அவர்​களை மீட்​டு, கடத்தி சென்ற அருண்​கு​மார், பார்த்​திபன் இரு​வரை​யும் கைது செய்​துள்​ளோம்​. மேலும்​ தலைமறை​வாக உள்​ள மற்​றவர்​களை தேடி வருகிறோம்​,’ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x